25 Feb 2011

சாதாரண குடிமகனின் நிகழ்வுகள்!!!!!



இரண்டு மாதம் முன்பு எங்கள் 8 வயது மகனுடன் சென்னை சென்றிருந்தோம். அவனின் உயரம் 132 க்கு மேல் இருந்ததால் பிறப்பு சாற்றிதழும் கருதியிருந்தோம். சென்னை செல்லும் போது டிக்கட் தருபவர் அரை டிக்கட்டு தந்து விட்டார். மேலும் சட்டத்தையும் நினைவுபடுத்தி கொண்டார்.  திரும்பி வரும் போதும் சாற்றிதழ் இருக்கும் தைரியத்தில் பேருந்தில் இடம் பிடித்து இருந்து விட்டோம். பேருந்தும் கிளம்பி விட்டது. என்னவ்ரும் என் மகனும் இருவர் சீட்டில் இருந்து விட்டனர்.  நாகர்கோயில் சேர்ந்த ஒரு பெண் அருகில் நானும்.   நான் 25 கொடுத்து அப்போது தான் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி  குளிர் மாறுவதற்கென கையில் வைத்திருந்தேன்.  என் கையிலுள்ள தண்ணீர் பாட்டிலை பார்த்தவுடனே அப்பெண்ணுக்கு தாகம் வந்து விட்டது  கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன் என்று கேட்டார். ஒரு பாட்டில் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று மனதில் நினைத்து கொண்டே கொடுத்தேன்.
பல பொழுதும் பயணங்களில் சிலர் நம்மை இளிச்சவாயர் ஆக்குவதை என்ன செய்ய என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே பேருந்து ஓட்டுனர் ஹான் அடித்து பேருந்து தயாராகி விட்டது என சிக்னல் கொடுத்தார்.   நல்ல வசதியான இருக்கை  இனி டிக்கட் எடுத்து விட்டு தூங்க வேண்டியது தான் என முடிவெடுத்து இருந்த போது நடத்துனர் அருகில் வந்து 3 டிக்கட் என்றார். நாங்கள் சாற்றிதழை கொடுத்தவுடன் அதை நான் ஏற்று கொள்ள இயலாது இச்சாற்றிதழில் இருக்கும் சிறுவனின் பெயரும் இச்சிறுவனும் ஒரே ஆள் என்று நான் எப்படி அறிந்து கொள்வது.   நீங்கள் என்னை ஏமாற்ற வேறு ஒரு சிறுவனின்  சாற்றிதழ் கொண்டு வந்திருந்தால் நான் தான் போலிஸில் மாட்ட வேண்டும் என என்னவெல்லாமோ புலம்புகின்றார்.  பையன் உயரம் கணக்கு பண்ணி டிக்கட் தர வற்புறுத்துகின்றார்.  நாங்களும் விடும் படி இல்லை. நாங்கள் வரும் போதும் அரை டிக்கட்டு தான் எடுத்துள்ளோம் அப்படி போலிஸ் கேஸ் என வந்தால் நாங்கள் வர தயார் என் சொல்லியும் வடபழனி அருகில் வந்த போது பேருந்தில் இருந்து உடனே இறங்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றார். நாங்களும் விடும் படியில்லை பேருந்தில் இருக்கும் பண்பானவர்கள் எல்லாம் அமைதியாக இருந்து காட்சியை பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒரு குரல் கூட ஆதரவாக இல்லை!  அதில் இருந்த ஒருவன்;  சினிமா டிக்கட்டு  அரை டிக்கட் என்று நீங்கள் வாங்குவது உண்டா பேருந்தில் மட்டும் அரை டிக்கட்டு கேட்கின்றீர்கள் என நடத்துனருக்கு வக்காலத்து வாங்குகின்றான்.   பேருந்தில் இரு காவலர்கள் கைதியுடன் பயணித்தனர்.  அவர்களாவது நியாயம் பேசுவார்கள் என்றால் நடத்துனர் பாவம் அவர் கோர்ட்டுக்கு அலைய இயலுமா,  நீங்க முழு டிக்கட் எடுங்கள் அல்லது பேருந்தை விட்டு இறங்குகள் எங்கள் பயண நேரத்தை கெடுக்காதீர்கள் என கூக்குரல் இடுகின்றனர்.  
இனி வேறு வழியில்ல என்று தெரிந்தவுடன் நாங்கள் ஏறிய  பேருந்து நிலையத்தில் கொண்டு விடுங்கள் என பிடிவாதமாக  இருந்து விட்டோம்.  நடத்துனர் பயமுறுத்தியும் கண்டுக்கவே இல்லை. வேறு வழியில்லாது ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்திற்க்கு ஏற்றி விட்டான்.  பேருந்து நிலையம் வந்து புகார் கொடுக்கலாம் என்றால் அங்கு காவலர்கள் தற்போது  காப்பி குடிக்க சென்று விட்டதாகவும் திருநெல்வேலியில் முறையிடவும் கூறிவிட்டனர்.  இங்கு வந்து முறையிட்டு  2 மாதமாக காத்திருக்கின்றோம் ஒரு செய்தியும் தெரியவில்லை.   பேருந்து நடத்துனர் கூட அரசு கொடுக்கும் பிறப்பு சாற்றிதழை மதிக்கவில்லை என்றால் அரசு சார்ந்த சாற்றிதழ்கள் அவர்கள் அலுவலகர்களுக்கு லஞ்சம் பெறமட்டுமே உதவும் என்றே தோன்றியது.
 சமீபத்தில் கூட ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
நவம் 27 தியதி ரேஷன் கடைக்கு சென்று சீனி வாங்க சென்றிருந்தேன். ரேஷன் கடை எங்கள் வீட்டில் இருந்து 3 கி.மீ தள்ளி ஒரு ஒதுக்கு புறமான வீட்டில் நடத்துகின்றனர்.  என்னவர் உள்ளூரில் இருக்கும் போது அவருடன் செல்வதே சாத்தியமான வழி.  அவர் உள்ளூரில் இருக்கும் போது ரேஷன் கடை விடுமுறை நாட்களாக இருக்கும். செவ்வாய், வியாழன், சனி மட்டுமே ரேஷன் உள்ள நாட்கள், கடைசி சனியும்  விடுமுறை தான்.  10 துவங்கி 1 வரை  மதியம் 2 துவங்கி 6 மணி வரை நேரம் என குறிப்பிட்டிருந்தாலும் ரேஷன் கணக்கு எழுதுபவன் நிறுப்பவன் முனு முனுத்து கொண்டே தான் தருவர்.  5 மணி க்கு சென்றால் இனி கணக்கு பார்க்கும் நேரம் என்று திருப்பி அனுப்பி விடுவர்.  2மணிக்கு சென்றாலோ சாப்பாட்டு நேரம் இப்படி அவர்கள் வீட்டில் இருந்து மக்களுக்கு தருவது போல் தான் கவலைபட்டு கொள்வர்.    நான் இந்த மாதம் சீனி வாங்க  சென்ற போது உங்கள் ரேஷன் கார்டில் பக்கம் இல்லை ஏன் ஒட்டவில்லை, உங்களுக்கு தெரியாதா எல்லா தொலைகாட்சியிலும் இதை தானே சொல்கின்றார்கள் நீங்கள் என்ன பண்ணி கொண்டிருந்தீர்கள் என ஒரே கேலி கிண்டலுமான அறிவுரைகள். போதாத குறைக்கு  என்னை போல் சீனி வாங்க வந்தவனும் எங்கள் கார்டை பார்த்தீர்களா நீங்க மட்டும் எங்க போனீங்க என்ற கிண்டல் வேறு!!!  நான் 27 தியதி வந்த போது நீங்கள் தான் ஒட்டி தரவில்லை  நான் பொறுப்பல்ல  எனக்கு சீனி தந்தே தீர வேண்டும் என கதைத்து கொண்டு நின்றேன். ஆனால் சட்டத்திற்க்கு புறம்பே சீனி தர இயலாது வரும் செவ்வாய் வாருங்கள் பார்ப்போம் என திருப்பி அனுப்பினார். வரும் வழியில் ஒரு  'அம்மா' கட்சிகாரரை பார்த்து  ரேஷன் கார்டு  ஒட்டி வாங்கினோம்.  இப்படியாக   சாதாரண் மக்கள் வாழ்க்கையை கேலிகுரியதாகவே மாறுகின்றது.  மக்கள் என்ற ஒரு கூறுகெட்ட கூட்டம் வேறு இவ்வகையான சுரண்டலுக்கு குடைபிடிப்பதால் எம்மை போன்றோரும் ஏதாவது கட்சியில் சேராது வாழ இயலாது போலவே உள்ளது! 

6 comments:

  1. உண்மை தான். தனிமனிதனாக உள்ள பொதுமக்கள் மதிப்பற்றவர்கள்.

    ஒரு முறை மின்கட்டணம் செலுத்தல் குளறுபடி தொடர்பான பிரச்சனைக்காக நான் வாதிட்டேன். சுற்றியிருந்த 50 பேர் வேடிக்கைதான் பார்த்தார்கள். ஒருவர் கூட ஆதரவாக பேசவில்லை.

    பெண் என்று கூட பார்க்காமல் தெருநாய் கத்துகிறது
    என்று கடுமையாக விமர்சித்தனர் மின்வாரிய ஊழியர்கள். அதற்கு கூட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்.

    சாதாரன பொதுமக்களாய் பேசி பயனில்லை என்பது புறிந்தது. என்னிடம் இருந்த பத்திரிக்கையாளர் அடையாள அட்டையை எடுத்து கழுத்தில் போட்டேன். ஆடிப்போனார் மின்வாரிய ஊழியர். சாரி மேடம் என ஒரு 20 தடவைக்கும் மேல் சொல்லியிருப்பார்.

    எங்கிருந்து வந்ததோ ஞானோதயம் சுற்றியிருந்த 50 பேரும் மின்வாரியத்துக்கு எதிராக ஒரே கூப்பாடு.

    செம்மரி ஆடுகளாக உள்ள பொதுமக்கள் திருந்தும் வரை பொதுமக்களில் தனிமனிதனுக்கு நிச்சயம் விலை இல்லை.

    ReplyDelete
  2. எனக்கு தமிழ்நாடு போக்குவரத்து, போக்குவரத்து கழக விதிமுறைகள் தெரியாது.

    புகைவண்டி நிர்வாகம் எவ்வாறு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சான்றிதழ் தேவை என்று சொல்கிறதோ அது போல பேருந்திலும் இருக்கலாம்
    அடுத்த முறை புகைப்படம் கூடிய வயது சான்றிதழ் இருந்தால் இருவர் இடையில் வாக்குவாதங்கள் வராது

    ReplyDelete
  3. ஆகா .... பத்திரிக்கையாளர் அட்டை எனக்கும் ஒன்று கிடைத்தால் எவ்வளவு நல்லது என்றே தோன்றுகின்றது. தமிழ் மலர் உங்கள் கருத்து மிக சரியானதே.

    ReplyDelete
  4. நண்பர் ராம்ஜி அவர்களே பிறப்பு சாற்றிதழில் பொதுவாக புகைப்படம் இருப்பது இல்லை. ஆனால் அடுத்த பயணம் தொடரும் போது மகனின் பள்ளி அடையாள அட்டையும் பிறப்பு சாற்றிதழுடன் எடுத்து வைத்து விடவேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  5. வேடிக்கை பார்ப்பதுதான் தமிழ் மக்கள் பழக்கம். அவர்கலிடம் இருந்து உதவி எதிர்பார்ப்பது உங்கள் தவறுதான். தமிழ்மக்கள் சேர்ந்து குரல் கொடுக்க கூடிய இடம் சினிமா தியோட்டர்தான், அல்லது சினிமாவுக்கு மட்டுதான் குரல்தருவார்கள்

    ReplyDelete
  6. "தியேட்டர் என்பது தனியார் நடத்துவது . அங்கு அரை டிக்கட் இல்லை . அரசுப் பேருந்து என்பது அரசு நடத்துவது . அங்கு உண்டு. எனவே .இல்லாத இடத்தில் கேட்பது முடியாது . இருக்கும் இடத்தில் தான் கேட்க முடியும் இது கூடவா தெரியாது " என்று அந்த "மாமேதை"யிடம், பேருந்தில் இறந்து இறங்குவதற்குள் சொன்னீர்களா ?

    ReplyDelete