29 Jan 2011

சூத்திரம் போன சுப்பன்!


எங்க ஊரில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது. 


எளிய மனிதர்களுக்கு உணவு, உறவிடம், கல்வி என தேவையுள்ளவை எல்லாம் மிக இக்கட்டான; போராட்டமான சூழலில் பெறபட்டபோது ‘காதல்’ தான் மிக எளிதாக மலிவாக பெறப்படுவதாக இருந்தது .

மேலும் ஆண்கள்  சம்பாதித்து பெண்களை காப்பாறும் சூழல் இருக்கவில்லை. பெண்களும் ஆண்களை போன்றே பல பொழுதும் அவர்களை விட ஊதியம் பெறும் நபராகவே இருந்தனர். வீட்டு சண்டையில் கூட தன்னை அடிக்கும் ஆண்களுக்கு மறு கன்னத்தை காட்டாது, அடிக்கும் கணவனின் மறு கன்னத்தை பதம் பார்க்கும் பெண்களும் இருந்தனர். கள்ள காதலிலும் பொது உடமை கொள்கையை பின்பற்றும் சுதந்திரமும் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் பெண்களை விற்று பெண் வியாபாரம் செய்தபோது, கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியிலுள்ள பெண்களை தங்கள் பொது உடமையாகவே  நோக்கினர் என்பதும் ஒரு சொல்லப்படாத உண்மையாக இருந்தது.


                            `சில கேரள தமிழ் தொழிலாளரகளான ஆண்கள், தங்கள் ஊர் சென்று திரும்பும்போது ஒரு புது பெண்ணுடன் அதாவது அடுத்தவன் மனைவியையும் கொண்டு வந்து விடுவதும்  உண்டு.  கேரளா உடை, நடை, பாவனை கண்டு பல பெண்கள் தங்கள் வீடு வசதி மட்டுமல்ல மூன்றும் நாலு குழந்தைகளை கூட விட்டு விட்டு கையில் கிடைத்த நகை நட்டுடன் வந்து விடுவார்கள்.

                            எங்கள் வீட்டிற்கு பெயின்டு அடித்த, காலை இழுத்து இழுத்து நடக்கும் கந்தன் நினைவிற்கு வருகின்றார்.  அவர் அடுக்களை பெட்டியின் கதவில் வரைந்த ஒரு சித்திரம், ஓடும் நதியும் அதன் கரையில் முயல் காரட் தின்பதும், இருவர் அதன் கரையில் இருந்து மீன் பிடிப்பதும் ஒரு பெண் புல்லு கட்டுடன் அவ்வழியாக நடந்து போய் கொண்டிருப்பது போலவும் பல கோடுகளை அங்கும் இங்குமாக இட்டு சேர்த்து வரைந்த  படம்  இன்றும் நினைவில் நிற்கிறது.  

                    அவருக்கு ஒரு மனைவியும் ஒரு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் மனைவி எப்போதும் இஞ்சி தின்ற குரங்கை போன்ற முகத்துடன்  இருந்தாலும், நல்ல வேலை செய்யும் உழைப்பாளி மட்டுமல்ல அழகான பெண்மணியும் கூட! கந்தன் வேலைக்கு போகாது டிமிக்கி கொடுப்பதற்கு  சண்டையிட்டு கொள்வதும் கண்ட மேனிக்கு திட்டுவதும் அக்காவின் சகஜமான குணம்.  ஒரு முறை கந்தன் தன் மனைவியிடம் பெயின்ட் அடிக்க என கம்பத்திற்கு சென்று விட்டார்.  அக்காவும் பெரிதாக ஒன்றும் நினைக்க வில்லை. வேலை முடிந்தவுடன் பணத்துடன் வருவார் என்று ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் காத்திருந்தார். 

                            ஒரு நாள் பொங்கலுக்கு  வந்த ஐய்யப்பன், புது பெண்டாட்டி, இரண்டு பெண் குழந்தைகளுடன் பொங்கல் படியுடன் பம்மி பம்மி தன் வீடு வந்து சேர்ந்தார். அதிற்சியடைந்த மனைவி   ஐயப்பனிடம்  அதன்பின் பேசவே இல்லை,  மட்டுமல்ல முகத்தில் கூட முழிக்கவே இல்லை. ஆனால் அக்குழந்தைகளை தன் குழந்தைகள் போன்று ஏற்று கொண்டார்  எல்லா விடுமுறைக்கும் கம்பத்தில் இருந்து எஸ்டேட் வந்து விடுமுறை நாட்களை கழிக்கவும் அனுமதித்தார்.  இதுவும் ஒரு விந்தையான உண்மையாக தான் இருந்தது .
  

                  அதே போல் தான் “சூத்திரம் போன சுப்பன்”னின்  தம்பி தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்கு வந்து திருப்பிய போது, மூன்று குழந்தைகளின் தாயையும் தள்ளி கொண்டு வந்து விட்டான்.  நகை எல்லாம் விற்று தீர்ந்ததும், தேங்கி இருந்த காதலும் நீர்ந்து போனது.  தன் தம்பி வீட்டிற்கு வந்த சுப்பன்; வாடி வதங்கிப் போன  இப்பெண்ணின் நிலையை கண்டு கலங்கி, “கவலைப்படாதே என் தம்பி உன் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என கவலைப்படாதே என்னுடன் வா, உனக்கு நான் வேலை வாங்கி தாரேன்” என சுப்பன் தான் வேலை பார்த்த எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து; தன்  வீட்டு  வராந்தாவில் தங்க இடம் கொடுத்து வேலையும் வாங்கி தந்துள்ளான்.  

                         

   
ஒரு நாள் ஆசை வார்த்தை கூறி "சினிமாவுக்கு போவோம்" என டவுணுக்கு அழைத்து வந்தவன், அவள் மனம் குளிர ஆசை ஆசையாக சேலை வாங்கி கொடுத்து சினிமாவுக்கும் அழைத்து  சென்றுள்ளான்.  உச்ச கட்ட அன்பில்  தேயிலை காட்டுக்குள் இருந்து பேசிவிட்டு செல்லாம் என  அழைத்துள்ளான். ஏற்கனவே சூடு பட்டவளாக இருந்தவள் தன் பாதுகாப்பிற்கு என  ஒரு கத்தியும் தன் வசம் வைத்திருந்துள்ளாள். இதை எதிர் பார்க்காத சுப்பனின் “அதை” அறுத்து அவனிடமே கொடுத்துவிட்டு அவள் போலிஸ் ஸ்டேஷனுக்கு மிக லாவகமாக நடந்து வந்து சேர்ந்தாள். 


                உயிர் வலியில் துடித்த சுப்பனோ, தன் சூத்திரத்தையும் எடுத்து கொண்டு ஓட்டமாக வந்து காவலர்களிடம் கொடுத்து விட்டு மயங்கி விழுந்து விட்டான். பின்னால் நடந்து வந்த அப்பெண் போலிஸிடம் நடந்தவற்றை மிக தெளிவாக கூறியுள்ளாள். அதிற்சியில் உறைந்து போன மலையாள போலிஸ், சுப்பனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி நான்கு மணி நேரத்தில் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சேர்த்துள்ளனர்.

                      பல பெண்கள் அப்பெண்ணின் செயலை பாராட்டினாலும் ‘சூத்திரம் போன சுப்பன்’  என்ற பத்திரிக்கை செய்தி பல மலையாளிகள் கேலிக்கு தமிழர்களை கொண்டு சென்றது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் சுப்பன் இனி வருவானா வரமாட்டானா என்ற விவாதவும் விட்டபாடில்லை . ஆனால் சுப்பன் 2-3 மாதம் பின்பு உயிர் அங்கு இல்லை என கண்டுபிடிக்க நான் உதவியாக இருந்தேன் என பெருமையாக கூறி, தான் மருத்துவ உலகிற்கு ஆற்றிய சேவையை சொல்லி மலையாளி டாக்டர்ஸ் தன்னை அருமையாக கவனித்து கொண்டார்கள் என பூரிப்புடன் வந்து சேர்ந்தான்.


                ஆண்-பெண் மத்தியில் ஒரு பயமிருக்கும் என பேச பட்டாலும், அதன் பின்பும்  காதல் கொள்ளாமலும் இருக்கவில்லை, காதல் கொண்டு ஓடி போகாதும் இருக்க வில்லை எம்மக்கள். அப்படி இருந்தால் பூமி நின்று விடாதா என்ன?

22 comments:

  1. உங்க ஊர் ஆக்கள் ரொம்பவும் கராரான பார்ட்டி போலிருக்கிறதே.

    ReplyDelete
  2. //எங்க ஏரியாவில் நல்ல காதல் ஜோடியை விட கள்ள காதல் ஜோடி பெருகியிருந்தது. //


    நல்ல காதல், கள்ளகாதல் என்று எப்படி தரம் பிரிக்கிறீர்கள்!?

    ReplyDelete
  3. // கள்ள காதல் கொண்டு ஓடி போகாதும் இருக்க வில்லை எம்மக்கள்.//


    காதலை அனுமதிக்காத, அதற்கு கள்ள பட்டம் சூட்டம் உங்களை போல் ஆட்கள் உள்ள ஊரில் சுதந்திரமாக வாழமுடியும்!?

    பார்வை கோணத்தை கொஞ்சம் மாத்துங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  4. தோழர் வால்பையன் உங்கள் கருத்தை பெரிதும் மதிக்கின்றேன். இருப்பினும் காதல் நலன் பெயர்த்தால் நல்லது, தங்களுக்கும் சுற்றுமுள்ளவர்களுக்கும் கெடுதல் விடுவித்தால் கெட்ட காதல் அல்லது கள்ள காதல். ஆக்கபூர்வமான செயலுக்கு இட்டு செல்வது நல்ல காதல் தான் ஆனால் அழிவுக்கும் ஆபத்துக்கும் அழைத்து செல்வது கள்ள காதல் தானே? காதல் நல்லதே காதல் இல்லாது வாழ்வு இல்லை என்று நம்புகின்றேன் ஆனால் தங்கள் காதலால் அடுத்தவர்கள் வாழ அனுமதிக்காததை தான் என்னால் ஒத்து கொள்ள இயலவில்லை. காதல் புனிதமானது ஆனால் அர்த்தவும் பண்பும் ரசனை உள்ளதாகவும் இருக்க வேண்டும்! காதல் கிளிகளின்(love birds) காதலை ரசிச்சு பார்க்கலாம் ஆனால் நாயின் காதலை?

    ReplyDelete
  5. //அழிவுக்கும் ஆபத்துக்கும் அழைத்து செல்வது கள்ள காதல் தானே?//

    யார் அழிவுக்கு, யாருக்கு ஆபத்து!?
    உண்மையில் அழிவது அந்த காதலர்கள் தான், ஆபத்து அவர்களுக்கு தான், அதை செய்வது கலாச்சாரகாவலர்கள் என சொல்லி திரியும் ஒன்னுத்தக்கும் ஆகாத வெட்டிபயல்கள்!

    //தங்கள் காதலால் அடுத்தவர்கள் வாழ அனுமதிக்காததை தான் என்னால் ஒத்து கொள்ள இயலவில்லை.//

    ஒருவரது வாழ்க்கையை தீர்மானிப்பது இன்னொருவர் என்பதை மட்டும் ஒத்து கொள்கிறீர்களா? காதலர்களால் யாருக்கு என்ன நட்டம், கல்யாணம் ஆகிறுச்சுன்னா காதலே வரக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? அது இயற்கை என்பதால் தானே காதல் வருகிறது!

    //காதல் புனிதமானது ஆனால் அர்த்தவும் பண்பும் ரசனை உள்ளதாகவும் இருக்க வேண்டும்!//

    காதல் புனிதமானது, கற்பு தெய்வீகமானதுன்னு பேசி பேசி தான் பெண் பல்லாண்டு காலமாக அடிமையாகவே இருக்கிறாள்!

    உண்மை தெரியுமா? எல்லா விலங்குகளின் துணையை தேர்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு தான் உண்டு, இங்கே ஒரு பெண் தேர்தெடுத்தால் அதற்கு பெயர் கள்ளக்காதல்!

    நாய்காதல் என்ன பண்ணுச்சு!?
    நாய் மட்டுமல்ல அனைத்து உயிர்களின் அத்யாவிசய தேவை இனபெருக்கம் தான், காதலின் ஆதாரபுள்ளியே இனசேர்க்கை தான்.

    காதலுக்கும், காமத்துக்கும் சம்பந்தமில்லை என்றால் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் தான் காதலிக்க வேண்டும்!

    ReplyDelete
  6. அப்ப்பா........ காதல் என்ற பெயரில் காதலுனுடைய குழந்தையை கொல்வதும் காதலுக்கு என பெற்ற குழந்தையை சுட்டு பொசுக்குவதும் காதலுக்கு என பச்சிளம் குழந்தைகளை அனாதர்களாக தவிக்க விட்டு காதல் சுகம் தேடும் மனிதர்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள். அவ்விதம் பாதிக்கப் பட்ட குழந்தைகளிடம் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் 6 மாதக் குழந்தை கவனிப்பாரற்று வளரும் சூழலை கண்ட போது காதலும் கத்திரிக்காயும் என்று தான் தோன்றியது. காமமற்ற அன்பே பெரிது வணக்கத்துக்குரியது!!!!!

    ReplyDelete
  7. பெற்றோரின் கள்ள காதலால் கண்ணீர் சிந்தும் குழந்தைகள்! யாராவது ஒரு குழந்தைக்காவது பாதுகாவலர்கள் ஆகவாவது இயலுமா?https://picasaweb.google.com/baba.josephine/Orphan#

    ReplyDelete
  8. //காதல் என்ற பெயரில் காதலுனுடைய குழந்தையை கொல்வதும் காதலுக்கு என பெற்ற குழந்தையை சுட்டு பொசுக்குவதும் காதலுக்கு என பச்சிளம் குழந்தைகளை அனாதர்களாக தவிக்க விட்டு காதல் சுகம் தேடும் மனிதர்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள். //

    கொல்வதும், வஞ்சம் தீர்ப்பதும் எல்லா செயல்களிலும் உண்டு, அதற்கு காதல் மட்டுமே காரணம் என்பதை தான் சாடுகிறேன்.

    பச்சிளம் குழந்தைகளையும் கூடவே எடுத்து போக தான் எல்லோருக்கும் ஆசை, யார் விடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்!

    காதலால் பாதிப்படையாத மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள், சொற்பங்கள் தான் உங்களுக்கு செய்தியாகி விட்டது

    http://valpaiyan.blogspot.com/2008/11/blog-post_14.html

    //காமமற்ற அன்பே பெரிது
    வணக்கத்துக்குரியது!!!!! //

    அதுக்கு பேரு நட்பு, காதல்னு சொல்லக்கூடாது!

    ReplyDelete
  9. //பெற்றோரின் கள்ள காதலால் கண்ணீர் சிந்தும் குழந்தைகள்! யாராவது ஒரு குழந்தைக்காவது பாதுகாவலர்கள் ஆகவாவது இயலுமா?https://picasaweb.google.com/baba.josephine/Orphan# //


    நல்லா லேபிள் போட்டு குழந்தைகளின் மானத்தை வாங்குவதற்கு நன்றி, இதுக்கு அவுங்களை தங்களை பாதுகாத்துகுவாங்க!

    ReplyDelete
  10. உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி. தனிமனிதர்கள் நாம் அனைவரின் கருத்தும் ஒத்து போக வேண்டியது இல்லை என்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. //தனிமனிதர்கள் நாம் அனைவரின் கருத்தும் ஒத்து போக வேண்டியது இல்லை என்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். //


    ஒத்து போனால் நாம் மனிதர்கள் அல்ல, இயந்திரங்கள்!

    ReplyDelete
  12. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நானும் கேட்க நினைத்தேன் - வால்பையன் கேட்டார். கள்ளக்காதல் என்ற சொல்லே புரியாத புதிர். நாயின் காதலை ஏன் நல்ல விதத்தில் பார்க்க முடியாது என்கிறீர்கள்?
    'இஞ்சி தின்ற குரங்கு' என்றால் என்ன?

    ReplyDelete
  13. காதலில் ஒரு புனிதமோ புண்ணாக்கோ இல்லை என்று நினைக்கிறேன். காதலென்றால் காலத்துக்கும் நிற்கும் என்று கதை கட்டிக் கேட்டதால் சாதாரண உணர்வை மிகைப்படுத்தி நாமும் துயரப்பட்டு அடுத்தவரையும் துயரப்படுத்துகிறோம். காமமற்ற அன்பு வணக்கத்துக்குரியதா? காமமற்ற அன்பு ஆண்-பெண்ண்க்கிடையே வளரவே வளராது என்று நினைக்கிறேன். (அப்பா அம்மா சகோதர பாசத்தை இதில் இழுக்காதீர்கள் :) காமம் என்பதும் சாதாரண உடல் உபாதையே. சிலருக்குக் கிளம்புவதே இல்லை; சிலருக்கு அடங்குவதே இல்லை. பெண்களிலும் இந்த வகை உண்டு. விருப்பமில்லை என்றால் ஒதுங்குவதை விட்டு வெட்டுவது முட்டாள்தனம்.

    ReplyDelete
  14. கள்ளக்காதலால் கண்ணீர் சிந்தவில்லை குழந்தைகள். பொறுப்பின்மை எந்த வகையிலும் வெளிப்படும். ஒரு விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு அத்தகைய பெற்றோர்கள் இல்லாததே மேல். குழந்தை பெறாமல் உறவு கொள்ளும் அறிவு இல்லாததால் இப்படி நடக்கிறது. நல்லக் காதல் குழந்தைகள் கண்ணீர் சிந்தினால் பரவாயில்லையா?

    ReplyDelete
  15. உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!இப்படியெல்லாம் கேள்வி எழும் என்று இருந்தால் இந்த பதிவை வெளியிட்டிருக்க மாட்டேன்... என்னவர் அப்போதை கேலி செய்தார். என் பதிவிலுள்ள ஒவ்வொரு பாத்திரமும் உண்மையில் வாழ்பவர்கள், அவர்களுக்கு நேர்ந்த துயரைக்கூட மனக்கருத்துடன் நோக்கியவர்கள். அவர்கள் எங்கள் பகுதியிலுள்ள சாதாரண மக்கள். அவர்கள் கதையும் வலையில் உலவ வேண்டும் என்ற நோக்கமே எனக்குள்ளது. இஞ்சி தின்ற குரங்கு என்றால் முகத்தை எப்போதும் கோபமாகவே வைத்திருப்பவர்கள். நாய் காதலும் நம் பார்வையை பொறுத்து தான். ஆனாலும் புலி மற்றும் பூனை, மற்றும் யானை, சில பறவைகள் கொள்ளும் காதல் மறைவானது அதனால் சிறப்பானது,பண்பானது என கேள்வி பட்டுள்ளேன்.மேலும் நல்ல காதல் குழந்தைகள் கண்ணீர் சிந்தினால் பரவாயில்லையா என கேட்டுள்ளீர்கள்; நல்ல காதல் குழந்தைகள் கண்ணீர் காண மாமா பாட்டி தாத்தா போன்ற உறவுகள் இருக்கும் அல்லவா. கள்ள காதலால் அவதியுறும் குழந்தைகளின் சமூக நிலை அவர்கள் தனிமை, எதிர்காலம் பற்றி கனவு காணக்கூட உரிமையற்ற அவர்கள் என்னை கவலையுறசெய்யுகின்றனர்.

    ReplyDelete
  16. உண்மையில் நடந்த ஒரு விசயமாகவே இருக்கட்டும்!.

    அந்த குழந்தைகளை தனியாக விட்டு சென்றார் என்றால் அவரது முன்னாள் துணை எங்கே?

    அவ போயிட்டா, நான் ஏன் குழந்தைகளை பார்க்கனும் என்று அவன் சொன்னால், இத்தனை நாள் எப்பேர்பட்ட இழிபிறவியுடன் அவள் வாழ்ந்து வந்திருக்கிறாள்.

    அவர்கள் காதலை ஏற்றுகொண்டால், அவர்கள் குழந்தையுடன் அங்கேயே வாழ்ந்திருக்கக்கூடும், நாய்காதல், பன்னிகாதல் என்றும், எதோ கொலைகுற்றத்தை செய்தவரை போல காதல் செய்பவரை பார்ப்பதும் என்ன மாதிரியான சமூகம்.

    பெண்ணின் துணையை தேர்தெடுக்கும் அனுமதிக்கும் சமூகத்தின் நிலை என்ன?(மேலை நாடுகள்), பெண்களுக்கு உரிமை கொடுக்காது வாழும் நாட்டின் நிலை என்ன?(இஸ்லாம் நாடுகள், இந்தியா)

    ReplyDelete
  17. 'பதிவை ஏன் வெளியிட்டோம்' என நினைக்கும்படி நான் எழுதியிருந்தால் மன்னிக்கவும். செறிவாகவே எழுதியிருக்கிறீர்கள். சில judgmental வரிகள் படிப்பவர் மனதில், நீங்கள் சொன்னது போலவே, அவரவர் அனுபவ நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு எதிர்வினைகளைத் தோற்றுவிக்கின்றன. அவ்வளவே. தொடர்ந்து எழுதுங்கள். போகன் வலைப்பூவில் நீங்கள் கொடுத்திருந்த இணைப்பிலிருந்து இங்கே வந்தவன் உங்கள் பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் :)

    ReplyDelete
  18. நல்ல காதல் குழந்தைகள் கண்ணீர் காண யார் இருந்தால் என்ன? கண்ணீர் என்பது தான் பிரச்சினை. பொறுப்பின்மை எந்த வடிவிலும் வரலாம். காதல் என்பது நிலையானது என்று நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். காதலையும் குழந்தைகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம்.

    குழந்தை பிறக்காத நிலையில் வேண்டுமானால் நாள் வெப்பம் பார்த்து இணையலாமே தவிர, எத்தனை பேர் 'குழந்தை பெற வேண்டும்' என்று திட்டம் போட்டு இணைகிறார்கள்? அந்தக் கண உடல் உபாதையைத் தீர்க்க இணைகிறார்கள். பெரும்பாலான கருக்கள் அந்த மட்டில் விபத்தே. பொறுப்பின்மைக்குக் காரணமே விபத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்ளாததே.

    ReplyDelete
  19. நீங்கள் கூறுவது மறுக்க முடியாத உண்மை தான்.

    ReplyDelete
  20. கட்டுரை சிறப்பாக இருந்தது ... உள்லபடியே எழுதினீர்கள் ... காமம் இல்லாக் காதல் இல்லை ....

    ReplyDelete
  21. aahaa ஆஹா.. நேரில் பார்ப்பது போன்றே விவரிப்பு

    ReplyDelete