14 Sept 2010

கேரள கரையில் அல்லோலப்படும் எங்கள் வாழ்க்கை

எங்கள் பகுதி இடுக்கி மாவட்டத்தை சார்ந்ததால் கல்வி, வசதி வேலை வாய்ப்பு என எல்லா விதத்திலும் பின் தங்கியிருந்தோம். கேரளாவில்  மற்ற மாவட்டகாரர்கள் கூட இடுக்கியா என காட்டுவாசி மக்களை பார்ப்பதை போன்று எங்களை நோக்கினர்.  நாங்கள் 10 வகுப்பு பரீட்ச்சையை எதிர் கொள்ளும் விதமே அலாதியானது. மாதிரி தேற்வு ,சோதனை தேற்வு என எல்லாமே எங்களுக்கு பொது பரீட்சை தான்.  எங்கள் பள்ளியில் 40% தான் மிக சிறந்த வெற்றி விகிதம். தேற்வில் முதலாவது வருவது, குத்தகைக்கு என்பது போல் ஆசிரியர் பிள்ளைகளே!  அவர்கள் குழந்தைகளை 7 ம் வகுப்பு வரை தரமுள்ள பள்ளியில் அனுப்பி படிப்பித்து விட்டு, 8 வகுப்பு முதல்  எங்கள் அரசு பள்ளிக்கு கொண்டு வருவின். தேற்வுக்கு என அவர்களுக்கு மட்டும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல்  என மிக சிறந்த  பயிற்ச்சி நடைபெறும். எங்களை போன்ற மாணவர்கள் அனுமதி பெறுவதும் அவ்வளவு எளிது அல்ல.
எங்கள் பள்ளி முதல்வர் கூட ஒரு நாயர் சமுதாயத்தை சேர்ந்த  ஒரு பெண்மணியாவார். அவருக்கு தமிழர்கள் என்றாலே  ஒரு அருவருப்பு, பூச்சி புழு போல நோக்குவார்.  நான் மலையாள  வழி கல்வி கற்பினும் 'அவள் தமிழரா?' என என்னை மட்டம் தட்டாது இருந்தது இல்லை.  எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவும் களையவும் இயலாமல் நாங்கள் படும் துன்பம் எண்ணிவிடல் ஆகாது.
 அவருடைய தங்கைதான் கணக்கு  பாடம் எடுத்தார்.  அவர் ஒரு நோட்டு புத்தகத்தில்  விடைகளை செய்து வைத்திருப்பார்.  அப்படியே அதை பார்த்து பலகையில்  எழுதியிடுவார்.   எனக்கு கணக்கு விருப்ப பாடம்!    7ஆம் வகுப்பில் ஹரிகரன் என்ற ஆசிரியர் சரியான  வழிமுறையுடன் கணக்கு நடத்தியிருந்தார்.    மேலும் டூஷன் செல்வதால் கணக்கு அத்து படியாக இருந்த்து.   அதனால் பலமுறை கரும்பலைகயில் நான்  கணக்கு பாடம் செய்துள்ளேன்.   என்னை பாராட்டுவதை கூட “தமிழச்சி கூட நன்றாக கணக்கு செய்கின்றாள் உனக்கு முடியாதா என என் மலையாளி தோழிகளை கிண்டல் செய்வார்”.   எனக்கு மிகவும் அவமானமாக தோன்றும்.   என் தோழிகளும் தமிழர் என்றாலே  முட்டாள் எனவும்   உன்  வழி சொந்தம் மலையாளிகளோ என்ற தோரணையில் வினவுவர்.  ,  ராமானுஜர்   தமிழ் மேதை தானை என பல அறிஞர்களை என் இன துணைக்கு  தேட வேண்டி வரும்.   3 வருடப்படிப்பும் எனக்கு மிகவும் கொடியதாக இருந்த்து.   விளையாட்டாக மலையாள வழி கல்வியை தேர்ந்து எடுத்ததின் பலனை அனுபவித்து  கொண்டிருந்தேன்.   பல வேளைகளில்  ஒரு சில ஆசிரியைகளால் தனிமையாக்கபட்டேன்.   ஆலிஸ் என்ற ஆசிரியைக்கு என்னிடம் குற்றம் கண்டு பிடிக்க முடிய வில்லை என்பதால் என் தம்பியை குறை கூறி என்னை மட்டம் தட்டுவார்.  எனது ஆளுமையை வளர்க்க  வேண்டிய வயதில் ஒரு வித பய-காழ்ப்புணற்ச்சியால் எனக்குள் ஒளிந்துகொள்ள பழகி கொண்டேன்.   சில விளையாட்டான பேச்சு கூட இன மொழி வெறியாக மாறுவதை கண்டு தோழிகளிடம் பேசுவதை தவிர்த்து எனக்குள்  பேசிகொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு  மிகவும் பிடித்த  மோன்சி என்ற  ஒரு தோழி இருந்தாள் . அவளுடைய அப்பா  எங்களுக்கு கணக்கு பாடம் நடத்துவார்.  மோன்சி மற்று எல்லா பாடத்திலும் முதலாவது வந்து விடுவாள்.  ஒவ்வொரு பாடவும் பாடலாக படித்து வைத்திருப்பாள்.  ஆனால் கணக்கு மட்டும் மக்கப் செய்ய இயலாததால்  மிகவும் கஷ்டபடுவாள் .  அவளுடைய அப்பா வரிசையாக கேள்வி கேட்டு கொண்டே வருவார், நான் சொல்லி அவள் சொல்லாவிடில் கை மொழியில் அடிப்பார், கடுமையான வார்த்தைகளால்  அவளை திட்டுவார்.  போக போக இச்செயல் என்னிடம் பொறாமை கொள்ளும் சூழலுக்கு அவளை தள்ளியது.   பின்பு எனக்கு மிகவும் பெரும் எதிரியாக மாறினாள்.   அவளுடைய அப்பா கம்னியீஸ்டு  என்பதால்  தர்க்கம் பேசுவதயே மூலதனமாக வைத்து என்னை மடக்குவதில் குறியாக இருந்தாள்.    ஒரு முறை அவளுடைய அம்மா ,என் அம்மாவிடம்  உங்க மகளை வகுப்பு தலைவியாக இருக்க அனுமதிக்காதீர்கள்.    என் மகளுக்கு மன உளச்சலை கொடுக்கின்றது என கூறியுள்ளார்.    எனது அம்மாவும்   "தலைவி ஆகி மலையாளிகள் கிட்டை வம்பு இழுக்காதே பேசாம பாடத்தை  மட்டும் படித்துவிட்டு வா" என  எனக்கு அறிவுரை கூறினார்.   இது என்னை மன அளவில் பெரும் ஊனம் ஆக்கியது.  இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் மாணவனுக்கும் ஒரு கதையிருக்கும்.
எனது  பெரியப்பா மகன்,அவன் மட்டும்  10 வகுப்பு வரை படித்து வந்திருந்தான்.  அவனுடைய இரு அண்ணாக்களும் 5 வகுப்பிற்க்கு மேல் மழைக்கு கூட பள்ளி வாசல் செல்ல தயங்கினர்.   அவன் சூழல் மிகவும் மோசமானதாக இருந்தது.   அவன் 10 வகுப்புக்கு வருவதென்றால்  அது ஒரு பெரும் சாதனையே.  எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.  மிக சொற்பமான  வருமானம், நிறைய பிள்ளைகள். 
தேயிலை தோட்டங்களில்  வேலை நேரம் காலை  7  மணி என்பதால் பிள்ளைகள் துயில் எழுவதற்க்குள் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவர்.  பிள்ளைகள் முதல் நாள் மாலையிலுள்ள சாப்பாட்டை எடுத்து கொண்டு 8 மணிக்கு நடக்க ஆரம்பித்து விடுவர்.   பள்ளி வந்து சேரும் போது 9.30 மணி.  பள்ளி முடிந்தவுடன் நடக்க ஆரம்பித்தால் இருட்டும் முன் வீடு சேருவார்கள்.   6 மாதம் மழை, பெரும்வாரியான நாட்களில்  மின்சாரம் இருப்பதில்லை, சாப்பாடு கூட!   விடுமுறை நாட்களில் சிலர் வேலைக்கு செல்வர் சிலர்  விறகு  பெறுக்குவார்கள் அந்த வாரம் முழுவதும் பயண்படுத்த.  இப்படியான சூழலிலும் எனது சகோதரன் பள்ளிக்கு வந்தான்.    எங்களுடைய அரசியல் பள்ளியில் ஆரம்பித்துவிடும்.   அவன்  கம்முனிச்ஸ்ட் இயக்கத்தை சேர்ந்த SFI ல் இருந்தான்.   நான் நேரு ரசிகை என்பதால்  கை பக்கம்!(இப்போழுது எந்த பக்கவுமில்லை).   மேலும் கம்மினிஸ்ட் கூட்டத்தில் நிறைய கெட்ட பேச்சுக்களாகவே இருக்கும்.   அப்போழுது கேரளா மாநில கவர்னராக ராம் துலாரி என்ற பெண் இருந்தார். அவர் கையில்லாத சட்டை அணிந்தார் என கூட்டம் போடுவார்கள்.
என்னுடைய பெரியப்பா மகன் அரசியல் நன்றாக கதைப்பான்.   ஒரு முறை எங்கள் பள்ளி முதல்வரை கண்டபோது வேட்டியை மடக்கி கெட்டியிருந்தான் என்ற காரணத்தை கூறி 10 வகுப்பு தேற்வு எழுத விடாது தடுத்துவிட்டார்கள். அவனுடைய வாழ்க்கையும் திசை மாறி மாறி எப்படியோ ஆகிவிட்டான்.
பள்ளியில் என மட்டுமல்ல  கல்லைறைகளில் கூட சில பாரபட்சம் காணலாம். எங்கள் ஆலையங்களில்  ஜெபம் தமிழ், மலையாளம் என இரு மொழியில் நடைபெரும் . சில பாதிரியார்கள் தமிழில் ஜெபம் செய்தால் நான் மோட்சம் சேர மாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.   இன்னும் சிலரோ தமிழில் ஜெபிக்கின்றேன் என வார்த்தைகளை தப்பு தப்பாக கதைத்து மலையாளமே போதும் சாமி என சொல்ல வைத்து விடுவார்கள்.   சில மான ரோஷமுள்ள தமிழ் பக்தர்கள் நீ மலையாளத்தில் ஜெபி நான் தமிழில் தான் பாட்டு பாடுவேன் என்று அடம் பிடிக்கும் போது உங்க வால் குமளிக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.   ஒரு முறை எங்கள் ஆலயதிற்க்கு  ஒரு தமிழ் பாதிரியாரை நியமித்தனர். அவரோ உப்பும்சப்பும் அத்த பிரச்சனைக்கெல்லாம் ஜாதியை தூக்கி போட்டு இருந்த கொஞ்சம் தமிழர்களையும் பல பிரிவாக்கினார். 
6 மாதம் முன்பு எனது அம்மாவுடன் எனது ஊரிலுள்ள வங்கிக்கு சென்றபோது வங்கி அதிகாரி ,’மங்கி’ மாதிரி  மூக்கு கண்ணாடியூடை நோக்கினார்.  எனது அம்மா கொஞ்சம்  பணத்தை சேமிப்பு நிதியில் செலுத்த சென்றிருந்தார்.   வங்கி அதிகாரியோ நாளை வா….. என கத்திகொண்டிருந்தார். எனக்கு வீட்டிற்க்கு போக வேண்டாமா   ங்,ங்கி.,ங்ஊ என  திட்டுகின்றார்.   அம்மா கூறுகின்றார் 3 வது தடவையாக வருகின்றார்களாம்.   என் சிந்தனை எங்கள்  பல்கலைகழக வங்கிக்கு  சென்றது………..
மேலாளரின் அரியணையை நோக்கினேன்.   அவரோ   மலையாளி சேச்சிமாரிடம் சிரித்து சிரித்து கதைத்து கொண்டிருந்தார்.  ஒரு தமிழ் அம்மா அவர் மகன் ,மருமகள் மேல்அதிகாரியை காண கருணைவிழிகளுடன்  காத்து நின்று கொண்டிருந்தனர். அதிகாரி சேச்சிமாரை வழியனுப்பி விட்டு  கைய்யாலே  நாளை வா என உத்தரவிட்டான்.  அந்த இளம் பெண் பாரதி கண்ட புதுமை பெண் போல் அறை கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்று வாகனம் வாங்க  வங்கி கடம்  வேண்டுமென்று பணிந்தாள் .  அதிகாரியோ  அவருடைய அலுவலக கோப்புகளில் நின்று கண் எடுக்காது ஏதோ பதில் கூறி கொண்டிருந்தார்.   அப்பெண் அறைக்கு வெளியில் வந்து அவரை(னை) திட்டுவது கேட்டது.   காலம் மாறினாலும் கோலம் மாறாததை கண்டு  என் மனம் கலங்கியது.

14 comments:

  1. இது போன்ற நிகழ்வுகளை கேள்விபட்டிருக்கிறேன், முதல் முறையாக பாதிக்கப்பட்டவரின் மூலம் அறிகின்றேன். என்னைபோன்ற பல தமிழர்கள் எங்கள் தளத்திலிருந்து குரல் கொடுக்க போராட தயாராக இருக்கலாம், ஆனால் எவ்வழியில் என்று தெரியவில்லை :(, வருந்துகின்றேன்.

    ReplyDelete
  2. படிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஒரே நாட்டிற்க்குள் இருந்து கொண்டு நாம் செய்யும் இந்தப் பாகுபாடு நமது அறியாமையே காட்டுகிறது.
    சுயநலத்தின் இன்னொரு முகம் தான் மொழி, சாதி, இனம் சார்ந்த பாகுபாடு. என் மக்கள், என் குழுமம் போன்ற உணர்வுகள்.

    அனால் இத்தகைய தடைகளையும் தடங்கல்களையும் தாண்டி ஜெயித்து வந்த உங்களின் தன்னம்பிக்கை, உழைப்பு, போராட்ட குணம், விடா முயற்சி ஆகியவை போற்றுதலுக்கு உரியது.

    ReplyDelete
  3. நன்றி ஜோயி பிரபு. தமிழம் விட மனிதம் வளர வேண்டும். நம் தமிழ்ர்கள் நம்க்கு செய்யும் துரோகத்தை இனி ஒரு முறை கதைக்கின்றேன்.

    ReplyDelete
  4. ராம்ஜி அண்ணா மிக்க நன்றி உங்கள் வரவுக்கு.உங்கள் பணிச்சுமை மத்தியிலும் என்னை போன்ற வளரும் இணையத்தவரை வாழ்த்தும் உங்களே போற்றுகின்றேன்.

    ReplyDelete
  5. வருந்துகிறேன் என்கிற மோசமான வார்த்தையை தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது இந்த இந்திய எ(ஒ)ருமைப்பாட்டில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது.. எப்படியாவது முடிந்தவரை நேர் வழியில்முன்னேறப்பாருங்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ! எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் உங்கள் பதிவுக்கு கூடுதல் நனமை சேர்க்கும்.மலையாளிகளின் இனப்பாகுபாடுகளை நானும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டுள்ளேன். தொடர்ந்து இது போன்ற அனுபவங்களை நடுநிலையுடன் எழுதுங்கள்.வலைப்பூவில் எழுதும் அளவுக்கு இருக்கும் உங்களுக்கே இப்படி ஒரு அனுபவம் இருக்கையில இன்னும் சாதாரண வாழ்க்கை வாழும் மற்றவரின் கதியை நினைத்தால்

    ReplyDelete
  7. தோழி உங்களை போல நானும் தமிழக எல்லையை ஒட்டி உள்ள கேரளா வாழ் தமிழர் தான். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சொத்த ஊர்.

    நானும் கேரளா கல்வி முறையில் பள்ளிப்படிப்பை படித்து வந்தவள் தான். உயர்கல்வி மட்டும் தமிழகத்தில் படித்தேன். பல முறை இதுபோன்ற அனுபவங்கள் நிகழ்ந்தது உண்டு.

    பத்திரிக்கையாளராக பாலக்காடு, கொச்சியில் பணியாற்றும் போதும் இது போன்ற சிறுமைபடுத்துதல்கள் நடந்தது உண்டு.

    தற்போது தமிழகத்தில் பணியாற்றுகிறேன். இங்குள்ள மக்களின் மனநிலைக்கு கேரளா எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது. கேரளாவில் உயர்கல்வி படிக்காததை எண்ணி இப்போது வருத்தப்படுகிறேன்.

    கேரளாவில் போராடி போராடி பெற்ற கல்வி தந்த அறிவை தமிழகத்தில் எளிதாக கிடைக்கும் கல்வி தறுவதில்லை. கேரளாவில் இருக்கும் பத்திரிக்கை நேர்மை, தைரியம், துள்ளியம் தமிழகத்தில் இல்லை. கல்வி, அரசியல், பொதுபிரச்சனைகளில் தமிழகம் படு மோசம்.

    தமிழகத்துக்கு வந்த பின்புதான் கேரளாவின் அருமை தெரிகிறது.
    கேரளாவில் இருக்கும் கொடுமைகளை விட இங்கு பல மடங்கு கொடுமைகள் கொட்டிக்கிடக்கிறது.

    சிறுமைபட்டாலும் கேரள தமிழராய் பெருமை கொள்வோம்.

    ReplyDelete
  8. உண்மை தான் தமிழ் மலர். நம் மக்கள் மாற வேண்டும். ஜாதி, இனம், மதம், தொலைகாட்சி என வீழ்ந்து கிடக்கின்றார்கள். பள்ளி,கல்லூரி, அலுவலகம், ஊடகம் என எங்குமே நியாயம் இல்லை!

    ReplyDelete
  9. நல்ல பதிவு.
    மனசு வேதனைப்படுகிறது.
    நாம் இங்கு எல்லோரையும் மரியாதையாகத்தானே நடத்துகிறோம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Hi Josephine,

    I am also from same district Munnar, In my i did not face any major problems because 90% students and teachers are Tamilians......10% only Malayalees....even some times they try to control us .....anyway your post will make awareness. You know one thing now a days too many malayalees are in Tamilnadu but they are facing like these problems.........If they continue like this it will cost them one day.....that day will come soon

    ReplyDelete
  11. இது நம் அனுபவம் மட்டுமே! இருப்பினும் இது மாறும் என்றோ மாறவேண்டும் என்றோ நாம் சொல்வதிற்க்கில்லை. மனிதநேயம் மலர வேண்டும். கேரளாவில் மொழி என்ற பெயரால் புரக்கணிக்கப் பட்டால் இங்கு ஜாதி மதம் குலம் கோத்திரம் என்று துயர்களை சந்திக்கின்றோம்.

    ReplyDelete
  12. GOOD AND BAD PEOPLE ARE IN BOTH COMMUNITIES.BUT COMMENTING ON TAMIL RACE IS VERY COMMON IN KERALA.IT IS BECASUSE OF OUR ILLETERCY.CULTURALLY WE ARE FAR FAR AHEADOF KERALA.IT IS MY VIEW.

    ReplyDelete
  13. கேரளா காரன் நம் உழைப்புறிஞ்சி.குமுளி முதல் முண்டக்காயம் வரை காடுகளாக இருந்த மலைகளை தேயிலைத் தோட்டங்களாக மின்னச் செய்ய நம் முப்பாட்டனார் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.மலேரியாவால் மாண்டவர்கள் எத்தனைப் பேர்..நம் உழைப்பின் பலனை நாம் அறுவடை செய்யும் காலகட்டத்தில் பிரிட்டிஷ் நமக்கு சுதந்திரம் கொடுத்து விட்டது..என் தகப்பனாரின் அலுவலகத்தில் இருந்த ஒரு கோப்பினை பார்க்கும் பொழுது எனக்கே தலை சுற்றியது.முல்லை பெரியாறு அணையைக் கட்டியதில் ஒரு மலயாலத்தானின் பங்களிப்பும் கிடையாது.அனைத்தும் தமிழர்களே மாண்டவர்கள் இரண்டாயிரத்து எண்ணூறு பேர்..

    ReplyDelete
  14. அன்புச் சகோதரி கேரள நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் இருக்கக் கூடிய தமிழர்களுக்கு எதிரான அதிகாரத் திமிர் பௌத்த சிங்கள இனவெறியர்களுக்கு இருக்கக் கூடிய திமிருக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
    தமிழகம் தனது உண்மையான வரலாற்றை உணராத வரை தமிழர்களுடைய அரசியல் பொருளாதார மற்றும் ஊடக பலம் சாதிய மற்றும் கட்சி வெறுபாடுகளை கடந்து ஒருங்கிணைக்கபடாத வரை எதுவும் மாறப்போவதில்லை. ஈழத் தமிழர்களான எங்களுக்கும் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை.

    ReplyDelete