1 Aug 2010

'South Oxford ' என அல்வா கொடுக்கும் திருநெல்வேலி பள்ளிகள்.

  தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகள்State Board, Matriculation,Central board ,International sylabus  என பல பெயர்களில் கால கரணபட்ட கல்வி திட்டத்தையே அளிக்கின்றது.குழந்தைகள் மன அளவில் முன்னேரியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாட திட்டம் நடைமுறையில் இல்லாதது பெரும் குறையே.  இதற்க்கு காரணம் மாற்று கருத்தற்ற பள்ளி சூழலே.  பள்ளி தாளாளர்க்கு பள்ளி முதல்வர் அடிமை என்றால்,  பள்ளி ஆசிரியர்கள்  முதல்வருக்கு அடிமை,  மாணவர்கள் ஆசிரியர்களுக்கும்!


தொடர்பியல் முறையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துள்ளது, பள்ளிகள்  பின் பற்றும் விதம்  பழமையாகவே உள்ளது.ஆசிரியர்கள் இந்த சீனகாரர்கள் மாதிரி. நன்மையை விட தீமைய்  பற்றி  தான் கணக்கிடுவர் நம் ஆசிரியர்கள் .மீடியா மோசம் மீடியா மாணவர்களை சீரளிக்கின்றது என எவ்வளவு நாட்களுக்களுக்கு தான் குப்பை கொட்டுவாங்க என்று தெரியவில்லை.காணொளி,படங்கள் என பல யுக்திகளை கைய்யாளலாம்.சிறப்பாக தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி போன்ற  மொழி பாடங்களுக்காவது.
பொதுவாக ஆசிரியர்கள் அவர்களை புதுமை(update)படுத்துவது கிடையாது. அவுங்க TTC ,BEd படித்த காலத்தில் தான் வாழ்வார்கள்.
பேருந்தில் பயணிக்கும் போது, மற்றும் பொது இடங்களில்  ஆசிரியர்களை காணும் போது அவதானிக்க முடிந்தது; அவர்களுக்கு ஒரு சமரசமுள்ள மனம் கிடையாது, தன்னலம்,வரட்டு கவரவம் என மூழ்கி கிடக்கின்றனர்.  பார்வையிலே ஒரு எகத்தாளம்! இவர்களால் எவ்வாறு ஒரு தலைமுறையே வழி நடத்த முடியும். இப்போழுது பரவாலாக காணும் அபாயம் ,ஆசிரியர்களும் தரம், ஜாதி என மாணவர்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
 பள்ளி தலைமையும்  ஆசிரியர்களின் ஆளுமையைய் மதிப்பதும் கிடையாது, அவர்கள் ஒரு பொருள் மட்டுமே.




இன்று தோட்ட வேலை செய்யும் நபர் தின கூலியாக   4 முதல் 5 மணி நேரம் வேலைக்கு 150  முதல் 200 ரூபாய் வாங்குகின்றார். அதே போல் நமது கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றால்  ஒரு நாட்களுக்கு 350 ரூபாய் கொடுக்காது ஆள் கிடைப்பது அரிது ஆனால் ஆசிரியர்கள் 2000-4000 ரூபாய்க்கு(பிரதி மாதம் )   கிடைக்க கூடும்.  தகுந்த ஊதியத்தை கூட்டு முயற்ச்சியாக வாங்க  வழி வகுப்பது கிடையாது, உதாரணத்திற்க்கு  துப்புறவு சங்கம் தெருவாரியாக வேலையாட்களை பிரித்து வைத்துள்ளது. ஆகயால் நமக்கு அடிமாட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது  சாத்தியமற்றது.  ஆனால் படித்தவர்களுக்கு ஒற்றுமை என ஒன்றில்லை.  போதாதற்க்கு இவர்கள் மத்தியில்  கழுத்தறுக்கும் போட்டி மட்டுமே நிலவுகின்றது. . சும்மா,  கிடைத்த சம்பளத்திற்க்கு வேலைக்கு சேருவது, ஆனால் கற்ப்பிப்பது மட்டும் அறைகுறையாக!  இந்த எல்லா பாதிப்பும் குழந்தைகள் படிப்பிலும்,வாழ்விலும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது.

மதுரை,கோயம்பத்தூர் பள்ளி தரத்தை விட மிகவும் கீழ் மட்டமாகவே நெல்லை மாவட்டம் உள்ளது.பள்ளி குழந்தைகளுக்கு சரியாக வாசிக்க கூட கற்று கொடுப்ப்து இல்லை. தனியார் பள்ளியில்  3 ம் வகுப்பு  குழந்தைக்கு வருடத்திற்க்கு   20 ஆயிரத்திற்க்கும் மேல் செலவாகுகின்றது,ஆகினும் tution எனும் தனி பாடத்திற்க்கு அனுப்பினாலே சிறப்பாக படிக்க இயல்கின்றது.
தனியார் பள்ளியில் பெற்றோர் கூட்டம்(parents meeting) என ஒன்று கிடையாது. ஒருவேளை  இருப்பினும் ஆங்கிலத்தில் பேசி ஒரு  பிரம்மையை உண்டாக்க  முயல்வார்களை தவிர ஆக்க பூர்வமான கருத்து பரிமாற்றம் நடப்பதாக புலன்ப்படவில்லை. சில அம்மாக்கள் இவ்வகையான கூட்டத்தை தங்கள் பிள்ளைகள் குறையை கூறும் ஒரு வழக்காடும் மன்றம் (கோர்ட்) மாதிரி எடுத்து கொள்வார்கள்.தொலைகாட்சி பார்ப்பதாக குறைபடுவர்.குறைகள் நீண்டுகொண்டே போகும்.


தேற்வு தாள் கொடுக்கும் படலம் என ஒன்று உண்டு. சில வீடுகளில் குடும்பத்துடன் வந்திடுவாங்க. அன்று குழந்தை தூக்கிலிடும் கைதி போல் தான். கை கட்டி கூனி குறுகி நிற்க்கும்,ஆசிரியை குற்ற மொழியே ஆரம்பிப்பார் 'தங்கிலீஷ்' என்ற மொழியில்! ஒரு பக்கம் அப்பா  ஆமா மிஸ் அடிங்க, படிக்கவே மாட்டுங்குதா, உடனே அம்மா,குழந்தை I.A.S பரிட்சையில் கோட்டை விட்டது போல் அழுதுடுவாங்க.



நிஜம் என்ன நிறைய வீடுகளில் அம்மா வானொலியில் விளம்பரம் வருவது போல் படி, படி என்று ஒரு சத்தம்  மட்டும் கொடுத்து விட்டு தொலைகாட்சி தொடர் கதைகளில் முழுகி விடிகின்றனர் என்பதே நிஜம்.



சமீப காலமாக சில பெயர்களில், மிக பெரும் அளவில் விளம்பரம் கொடுத்து வெறும் 10-15 சென்டு இடங்களில்  சில பள்ளிகளை ஆரம்பித்தனர் .அரசியல் அமைப்பு சட்ட படி பள்ளிகளுக்கு என சில அளவுகள் நிர்ணயித்துள்ளனர், மேல் நிலை பள்ளி என்றால் 3 முதல் 5 ஏக்கர் இடம்,உயர் மேல் நிலை பள்ளி என்றால் 5 முதல் 8 ஏக்கர் இடம். இவை எல்லாம் ஏட்டு சுரக்காய் என்று மட்டுமே எனில் சட்டங்களால் யார் பயண் அடைவர்.

 மேலும் கணிணி மயமாக்கபட்ட,குளிருட்ட பட்ட என பல வசதிகளை கூறி பள்ளிகள் ஆரம்பிக்கின்றனர். அவ்வாறாக ஆரம்பிக்க பட்ட பள்ளியே நெல்லை பப்ளிக் பள்ளி. வகுப்பு அறைகள்  குறுகியதும் கழிப்பிடங்கள் சந்திலும் பொந்திலுமாக அமைத்திருந்தனர்.  smart room  கற்ப்பித்தல் எனவும்   அறிமுக படுத்தியிருந்தனர்.ஒரே வருடத்தில்  மூடு விழா நடத்தி விட்டார்கள்.இதில் இந்த பணக்கார பெற்றோரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது.வீட்டில் தான் பாதுகாப்பு,அந்தஸ்த்து என கூறி வீட்டு வளாகத்தினுள்ளில் வளர்ப்பார்கள். பள்ளியாவது இயற்க்கை வளம் உள்ளதாக பார்த்து சேர்க்கலாம் இல்லையா?
இப்படி திருநெல்வேலி பள்ளி படிப்பு பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கின்றது. அடைமொழி south oxford யாவது தூக்கி எறிஞ்சுட்டு  அல்வா கொடுப்பதை நிறுத்தினால் யாவருக்கும் நல்லது. 


5 comments:

  1. இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட நெல்லை அரசு பள்ளி யில் படித்த மாணவிதானே மாநிலத்தில் முதலாவது வந்தார்.

    நான் படித்த காலத்தில் நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட) மாவட்ட பள்ளிகள் (அரசு) மிக சிறப்பாகவே இருந்தன- ஆத்தூர் அரசு மேல் நிலை பள்ளி, எட்டயபுரம் ராஜா அரசு மேல் நிலை பள்ளி, நெல்லை சந்திப்பு மதிதா இந்து மேல் நிலைப் பள்ளி.
    இந்த பள்ளிகளில் படித்தே என்னால் இந்திய மேலாண்மை பள்ளி, அஹமதாபாதில் (IIM A) மற்ற மாணவர்களுடன் சம அளவில் போட்டி போட்டு படிக்க முடிந்தது, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் எளிதாக பணி செய்ய முடிந்தது.

    என் சகோதரிகள், என் பள்ளி தோழர்களும் இந்த பள்ளிகளில் பயின்றே இன்று நல்ல உயர் பதவிகளில், வணிகங்களில் பெயர், புகழ், செல்வம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

    மந்திரமூர்த்தி அரசு மேல் நிலை பள்ளி நெல்லை யில் படித்த என் தந்தை யால் அரசு வங்கியில் குமாஸ்தாவாக சேர்ந்து முதுநிலை பொது மேலாளரரக உயர முடிந்தது.

    .
    அதே போல நெல்லை பாளையங்கோட்டை யில் உள்ள இன்ஜாசியர் பள்ளியில் படித்த பல பெண்கள் தொழிலிலும், குடும்பத்திலும், வலைப்பதிவுகளிலும் சிறந்து விளங்குகின்றனர். உதாரணம்- தமயந்தி (நிழல் வலை), சித்ரா (சும்மா), அம்பிகா (அம்பிகா காபி Town- இன்று கூகுளே நிறுவனத்தில் முதிர் நிலை துணை தலைவர் (SeniorVP), )

    இன்றும் நெல்லை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் பல சிறப்பாகவே இருக்கின்றன.


    Why do you go for Private schools, Go for Mandiramoorthy Hr sec school, Chapter schhol, MDT school, Xaviers school, Ignatius, Rose Mary, Kallani Govt hr sec school.

    ReplyDelete
  2. தாங்கள் ஜெயித்தவர்களை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். என்னுடைய கவலை தோற்ப்பவர்களை பற்றியதே. மேலும் மார்க்கில் முதலாவது வந்தால் பள்ளி முதல் இடம் ஆகிவிடுமா. குழந்தைகளின் மன உள நலனில் அக்கரை செலுத்துகின்றார்களா?,IAS,IPS போன்ற தேற்வுகளில் நீங்கள் குறிப்பிடும் பள்ளி மாணவர்கள் வருகின்றனரா?இவர்களுடைய emotional itelligent இவயை குறித்து உங்களது எண்ணம் ஏது.உங்களுடைய காலத்தை ஒப்பிடுவது சரியானதா என தெரியவில்லை.ஒரு 10 ம் வகுப்பு மாணவியால் தப்பில்லாது எழுத படிக்க வருமா?இப்போழுது நீங்கள் கவனித்தீர்கள் என்றால் ஒருவர் ஒருவரே அழைப்பதே ஹே பாய்,ஹேய் மேன் என்று தான்.கல்லைணை பள்ளியை பற்றி என்னுடைய பழைய பதிவில் கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  3. நான் உங்களுடன் வீண் வாதம் செய்வதற்கு இந்த பதிலை எழுத வில்லை. பள்ளிகள், ஆசிரியர் நலன்கள் முன்னேற வேண்டும் என்பதில் எனக்கும் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.

    இப்பொழுதும் பலர் நெல்லை, பாளை பள்ளிகளில் படித்து ஜெயித்து கொண்டு தான் இருக்கிறார்கள். IAS, IPS படித்தவர்களை மேற்பார்வை செய்யும் மந்திரிகள், நாடாளும் உறுப்பினர்கள் பலரை உருவாக்கிய பள்ளிகள், கல்லூரிகள் நெல்லையை சார்ந்தவை. உதாரணம்- நான் படித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களான தென்காசி அருணாசலம், பீட்டர் அல்போன்ஸ், கடம்பூர் ஜனார்த்தனம், எந்த இலாகா வேண்டும் என்று சொல்லுங்கள் அந்த மந்திரி பதவி இந்த கணமே தருகிறோம் என்று முன்னால் பிரதமர் வாஜ்பாயால் வாழ்த்து பெற்ற வைகோ.

    இப்போது நான் வசிக்கும் சென்னையை காட்டிலும் அறிவு வளர்ச்சி மனப்பான்மை வளர்ச்சி போன்றவைகளில் தென் இந்திய ஆக்ஸ்போர்ட் (palayamkottai) இன்றும் தனது பெருமையை நிலை நிறுத்தி வருகிறது என்றே சொல்லுவேன்.

    ஒரே குறை, ஆக்ஸ்போர்ட் அளவிற்கு ஆங்கிலப் புலமை அறிவும் பாளை பள்ளிகளில் வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  4. நண்பர் ராம்ஜி, வணக்கம். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.இதுவே வலைப்பதிவுகளின் பெருமை,பலம்.

    can you give me your e-mail id.

    ReplyDelete
  5. 1. ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட் !!
    2. சினிமா விமர்சனம்-குறுக்குப்புத்தி 18+
    3. இந்தியா ஒளிர்கிறது, இந்தியா ஒளிர்கிறது
    4.நேரடி ஒளிபரப்புக்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம்!
    5.ஆயிஷா

    (www.jeejix.com ) . உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete