22 Aug 2010

பெண்கள் கல்லூரியே இது நியாயமா?

பெண்கள் கல்லூரி கடந்தே எங்களது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. சமீபமாக ஒரு ஏழை மனிதர் கல்லூரி முன்பாக அழகிய சிவப்பு நிற ஊட்டி  ரோஸ், மல்லிகை போன்ற மலர்கள்  வித்து கொண்டிருந்தார். சுனாமியில் பாதித்த பகுதி போன்றே காட்சியளிக்கும் பூச்சற்ற கல்லூரியின் தோற்றம்  பூக்களால் புதுப்பொலிவுடன் அழகிய இளம் மங்கை போல் காட்சி அளித்து. 

சமீபத்தில்  அவ்வழியாக சென்றபோது பூக்காரரை காணவில்லை, அக்கல்லூரியில்  படிக்கும் தோழி வழியாக அறியபட்ட செய்தி 'பெரும் துயர்' போன்றே எனக்கு தோன்றியது. மாணவிகள் பூ வாங்குவதற்க்காய் கூட்டமாக நிற்ப்பதால் பூ விற்ப்பவரை கல்லூரியின் முன்பு நிற்க்க கூடாது என தடுத்து விட்டார்களாம்.

பூ விற்ப்பவர் ஒரு பரம ஏழை.ஒரு ஏழை குடும்பம் பிழைத்திருக்கும். அவருடைய குழந்தைகளும் மூன்று வேளை உணவு அருந்தி பள்ளி செல்லும் வாய்ப்பை பெற்றிருப்பாகள்.
ஏன், கல்லூரி மாணவிகள் கணிணி மைய்யத்தில், பேருந்து நிலையத்தில், பேருந்தில், கூட்டம் கூடி நிற்ப்பது மட்டும் அல்லாது  பல விதத்தில்  அராஜகம் பண்ணி கொண்டு தான் இருக்கின்றனர், கல்லூரி நிறுவாகத்தால் இதை  தடுக்க முடியுமா?. நான் கல்லுரிக்கு பயணிக்கும் பேருந்தில் இம்மாண்விகளில் சிலர்  இரண்டு மூன்று பேர் வந்து தன் தோழிகள் பத்து பேருக்காவது தனது புத்தகம் ,புத்தக பை மூலம்  சீட் பிடித்து விடுவார்கள். வயதானவர்கள் வந்தால்  கூட இருக்கை கொடுப்பது கிடையாது.   சில வேளைகளில் சண்டையிட்டு இருக்கை-seat  பிடிக்கும் சூழலுக்கு தள்ள பட்டுள்ளேன்.

சமீப காலமாக இரக்கம், அன்பு எல்லாமே ஞாயிருகளில்,, சர்ச்சுகளில் கேட்க்கும் வெறும் நற்செய்தியாக மட்டுமே கிருஸ்தவர்கள் மத்தியில்  மாறி வருகின்றது போல் தெரிகின்றது. சிறப்பாக ஆசிரிய பெருமக்களுக்கென சில மன- தொற்று நோய்கள் சமீப காலமாக வளர்ந்து வருகின்றது.

சமூக அக்கரை,மனித நேயம் என்பதை விட ஒழுக்கம்,கட்டுபாடு என பெயரில் மற்றவர்களை துண்புறுத்துகின்றனர்.அவர்கள் கண்ணில் எகத்தாளம், அகங்காரம் களியாடுவதை பல இடங்களில் உணரலாம்.

இவர்களிடம் கல்வி கற்று வரும்  மாணவர்களும்  இம்மனபாதிப்பினால் தான் ராகிங் போன்ற ஈன செயலில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளபடுகின்றனர்.

மாணவிகள் கல்லூரி  பருவத்தில் தான் பூ போன்றவற்றை வளமாக வாங்கி பயண்படுத்தும்  நேரம் மற்றும் ஆசை உள்ளது. ஆசிரியைகளின் மனதை விசாலபடுத்தாது மாணவிகள் நல்லதொரு கல்லூரி வாழ்க்கையை காணுவது கடினமே.

இப்போழுதும் என் கல்லூரி நாட்களை நினைத்து பார்ப்பது உண்டு. எங்கள் கல்லூரி விடுதிக்கு பூக்காரக்கா வராவிட்டால் அற்றைய தினமே வெறுமையாய் தோன்றுபவர்களும்  உண்டு.
 இப்போழுது பூக்கள் தோட்டதில் இருந்தாலும் கூட பறித்து தொடுக்க நேரம் இல்லை. அத்தான் மதுரை சென்றால் மல்லிகை பூ வாங்கி வருவார். சில வேளைகளில் வேலை பழு மத்தியில் பூ வைப்பதற்கே மறந்து விடும்.
கல்லூரி நாட்களில் நாங்கள் தோழிகள் ஒரு பந்து பூ என வாங்கி பங்கிட்டு வைத்த காலங்கள் மனதில் பூக்களாய் பூக்கின்றது.

9 comments:

  1. மிகவும் நெகிழ்வான பதிவு,
    இரக்கம், அன்பு எல்லாமே ஞாயிருகளில்,, சர்ச்சுகளில் கேட்க்கும் வெறும் நற்செய்தியாக மட்டுமே
    மிக அற்புதமான வரிகள்.

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. ஏன் கல்லூரி நிர்வாகத்தை ஏசப்பா கடவுள் கண்டிக்கவில்லை ? ஒரு வெளை கடவுளுக்கு சத்தில்லையோ ?

    ReplyDelete
  3. did the college start a flower stall? no.would any one say anything if he sells few yard away from the entrance?.today flowerseller... then ice wala...then slowly candies..then drug mixed candees... why all this?.a good business man can survive any where.dont worry his family is doing good because he has found a better place.

    MRS.Rajkumar

    ReplyDelete
  4. "then drug mixed candees.".

    oh please..

    .பெண்கள்ல கல்லூரிக்கு என்று சில இலக்கணங்க்அள் உண்டு. அது இன்னும் காலம் காலமாக இருப்பது தான் ஆச்சரியம். இதே பெண்கள் மருத்துவ கல்லூரிக்கு போகும்பொழுது கட்டுப்பாடு ஏதுமில்லை.WE ARE HIPPOCITES as always

    ReplyDelete
  5. நன்றி ராம்ஜி அவர்களே.

    நண்பா செந்தழல் ரவி, ஏசப்பாவை பற்றி நீங்கள் இன்னும் தெரியவேண்டியுள்ளது,அவரின் அறிவுரை, தப்பு பண்ணுபவர்களை ஏழு எழுபது தடவை(7*70) மன்னிக்க கூறியுள்ளார். அவ்ருடைய போதனைகள் ஆழமானவை,தற்போது காளான்ங்களை போன்று முளைத்துவரும் ஊழியக்காரர்களின் போதனையல்லவை.
    மதபோதகர்கள், என கூறிகொண்டு மக்களை துன்புறுத்தும் சட்டங்களை வகுத்தவர்களை எதிர்த்தார் என ஒரே காரணத்திற்க்காகவே கொல்லபட்டவர்.

    ReplyDelete
  6. Dear friend Raj Kumar,
    தாங்களுடைய கருத்தும் சிந்திக்க கூடியதே.
    ஆனால் என்னுடைய கருத்து மாணவர்கள் சட்ட திட்டங்களை விட, தனக்கு எது வேண்டும் வேண்டாம் என, கல்வி அறிவின் துணையுடன் பகுத்தறிவையும் பயன்படுத்தி சிந்தித்து சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும். கட்டாயபடுத்துதல் மீறவே தூண்டும். சும்மா வெறுமனே சட்டம், கட்டுப்பாடு என விதிக்காது ஏன், எதற்க்கு என புரிய வைத்து செயல்படுத்துவதே சிறந்தது.

    ReplyDelete
  7. //ஆசிரியைகளின் மனதை விசாலபடுத்தாது மாணவிகள் நல்லதொரு கல்லூரி வாழ்க்கையை காணுவது கடினமே.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  8. //.பெண்கள்ல கல்லூரிக்கு என்று சில இலக்கணங்க்அள் உண்டு. அது இன்னும் காலம் காலமாக இருப்பது தான் ஆச்சரியம். இதே பெண்கள் மருத்துவ கல்லூரிக்கு போகும்பொழுது கட்டுப்பாடு ஏதுமில்லை.//

    எந்த கட்டுப்பாட்டை கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்

    ReplyDelete
  9. நண்பர் புருனோ,
    உங்கள் வரவுக்கு மிக்க நன்றி.மீண்டும் வருகை தாருங்கள்.

    ReplyDelete