header-photo

செம்மொழி

செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை பகிர்ந்த  வலைப்பதிவை பார்த்த போது தமிழ் சினிமா காமடி மாதிரி இருந்தது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்.  தமிழகத்திலயே வழியே காணும். நம்மை அறிவாளின்னு காட்டிக்க ஆங்கிலம் தெரியாவிடிலும் தங்லிஷிலாவது  பேச வேண்டியுள்ளது. தண்ணிர் பிடிக்கும் பம்படியில் கூட அக்கா, மறைந்து மேடம் போட்டு பேசும் வழக்கம் வந்து வெகுநாளாகிவிட்டது. இதிலும் இந்த தமிழங்க இருக்காங்ளே வரட்டு கவுரவ பார்டீங்க!


என் மகனின் பள்ளி தோழனின் அம்மா என்னை மேடம் என அழைத்து பேசினாலும் நான் அக்கா என்று அழைக்கவே விரும்புவேன். அதனாலயே அவுங்க அவ்வளவாக என்னிடம் பேசமாட்டாங்க.  இதில் தொலைகாட்சியின் பங்கும் பெரிதுள்ளது. மலையாள சானலை பாருங்க சேச்சி (அக்கா),அம்மச்சி(அம்மா),சேட்டா(அண்ணா) என்ற சொற்களை தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விரும்பி பயன்படுத்துவர். நம் தமிழ் மொழி சானல்  தொகுப்பாளிகள் தான்  மேடம்,சேர்,என்ற பதங்களை குப்பம்மாவுக்கும் சுப்பம்மாவுக்கும் அறிமுக படுத்தி கொடுத்து கொண்டிருப்பவர்கள்.


சமீபத்தில் ஒரு நேர் காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது, என்னுடைய புத்திசாலித்தனத்தை விட ஆங்கிலத்தில் உரையாடும் தகுதியால் மட்டுமே அளக்கபட்டேன்.


இந்த மாநா(னா)டு தீருமானமெல்லாம் போடுவதர்க்கு பதிலாக தமிழை எளிய முறையில், சுவாரசியமுடன் கற்ப்பிக்கும் முறைகளை கையாள  வேண்டும், கணிதம், அறிவியல் போன்ற பாடஆசிரியர்களை விட தமிழ் ஆசிரியைதான் என் குழைந்தைகள் பயப்படுவார்கள். பொதுவாக தமிழ் கற்ப்பிக்க ஆண்
 ஆசிரியர் கிடைத்தால்  ஓரளவு தப்பித்து விடலாம், பெண் வாத்தியாருங்க
 பேச்சு செயல் எல்லாமே  வெறுப்பை/சலிப்பை கொடுக்கும்.  வார்த்தைகள் அடாவடித்தனம்  நிறைந்ததாக  இருக்கும்.  மாணவர்களை மாடுகளை போன்று கையாளுவார்கள். பள்ளியில் பாருங்க தமிழ் ஆசிரியை தான் எண்ணை வடிஞ்ச முகத்துடன் கடுகு வெடிப்பது மாதிரி, அழகு ரசனை அற்ற உடை அலங்காரத்துடன் வருவர். கோபம் வந்தால் வாயில் இருந்து வரும் வார்த்தை எருமை,நாய்,மாடு ,சனியன் என்றே இருக்கும்..


நாங்க கேரளாவில் பிறந்து கேரளாவிலே வளர்க்கபட்டோம். பொது இடங்களில் தமிழ் பேசினால் மதிப்பை பெற இயலாது. ஆகையால் பேச்சு மொழியாக மலையாளத்தையும் கற்று கொண்டோம்.வீட்டில் பெற்றோரிடம் ,உறவினர்களிடமும் தமிழில் பேசியே மகிழ்ந்தோம். ஆனால் சில          தமிழர்கள் சிறப்பாக  பீர்மேடு,குட்டிகானம்,ஏலப்பாறை,போன்ற இடத்தை சேர்ந்த தமிழர்கள் மூக்கு வழியாக மலையாளத்தில் தான் முக்கி முக்கி பேசுவாங்க. தமிழ் பேசும் தமிழ்ர்களை பச்சை மலையாளியை விட கேவலமாக பார்ப்பார்கள்.


இன்னும் வேரு ரக தமிழர்கள்,சாத்தான்குள்ம், திருநெல்வேலியை சேர்ந்தவங்க  மலையாள மொழியை சுட்டு போட்டாலும் பேச மாட்டேன் என்று அடம் பிடிப்பாங்க..மலையாளிங்க கேணைன்னு கிண்டல் அடித்தாலும் பாண்டினு அழைத்து கேலி செய்தாலும் கண்டுக்காம நடந்துக்குவாங்க.ஏன்னா அவர்கள் மொழி பரிச்சயம் இல்லாததால் பேச இயலாத மையாகிவிடுவார்கள்.எங்களை போன்ற தமிழர்களுக்கு அவர்கள் மொழியும் படித்துள்ளதால் கிண்டல் அடித்தாலும் பதில் வழக்காடி அவர்களுக்கு இணையாக வாழ,பேச பழகியிருந்தோம்.பாண்டினு அழைத்தால் உங்க கொள்ளு தாத்தா தமிழர் தானே,உங்க மலையாளமொழியின்  தாய் மொழியே தமிழ்தான்னு கூறி தமிழையும் கத்து கொடுத்துடுவோம்.எந்த மொழியானாலும் தெரிந்திருதால் பலம் தான். 
ஆனால் மலையாளமும் தமிழும் அற்ற களியாக்காவிளை போன்ற இடைத்தை சேர்ந்த தமிழர்களை என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.மலையாளமும் பேசாது, தமிழும் பேசாது  கலவரம் கொண்டு அலையுவாங்க.  எங்க பல்கலைகழகத்தில் ஆசிரியர், மாணவர்கள் என பெரும் பகுதி இவர்களால் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. இளுத்து அழுது ஒரு மலையாளம் அல்லாத தமிழ் பேசி அறிவாளின்னு  படம் காட்டியே பொழைச்சு போறாங்க. செம்மொழி மாநாட்டிலே இவங்களுக்கு தமிழ் பேச கத்து கொடுக்க ஒரு தீருமானம்  போட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம்.
அவர் அவருக்கு அவர் மொழிதான் செம்மொழி! 
சதான் ஹுசைன் சொல்லியுள்ளார்,என்னடா இங்கிலிஷ், புஷ்,தஷ்ன்னு நம்ம அரபி மொழி போல்வருமா? ஆக கையாள தெரிந்த மொழியெல்லாம் அவரவருக்கு செம்மொழியே!

ஜாஸ்மின் வெற்றி-குஷ்புவின் கருத்து?

 ஜாஸ்மின் இந்தவருட 10 ம் வகுப்பு தேற்வில் முதல் இடம் பெற்ற நெல்லை மாநகர பள்ளி மாணவி ஆவார். சமீபத்தில் குஷ்பு பேசிய போது தமிழக முதல்வரின் சாதனையாக  இதை குறிப்பிட்டார். மேலும் ஒரு தகவல் கூறினார்,ஜாஸ்மினுடைய தகப்பனார் வீடு வீடாக சென்று துணிவிற்ப்பவர் என்றும் , இப்படியுள்ள சூழலில் படித்த ஜாஸ்மின் முதல் இடம் பெற்றது முதல்வரின் சாதனை என்று.ஜாஸ்மினுடைய அறிவாற்றலை கேலி செய்வதாகவே உள்ளது. என்ன முதல்வர் ஜாஸ்மினுக்காக பரிட்சை எழுதினாரா?. ஜாஸ்மின் படித்த பள்ளியை நோக்கின் த்மிழக அரசின் சாதனை புரியும். மாநகர பள்ளி ஆக இருந்தும் போதுமான வசதியற்ற பள்ளி இது. பழைய பேட்டையில்  குற்றாலம் செல்லும் ரோட்டு ஓரம் அமைந்துள்ளது.பள்ளியின் வாசல் துர்நாற்றம் வீசும் பொது ஓடை, போதுமான இடவசதியற்ற முற்றம் என அரசு பள்ளியின் முகமுத்திரயுடன் காட்சி  அளிக்கின்றது.பெண்கள் பள்ளியாக இருந்தால் 5 முதல் 8 ஏக்கர் சுற்றளவு இருக்க வேண்டும். இப்பள்ளியின் சுற்றளவு ஒரு ஏக்கர் கூட இருக்க வாய்ப்பு இல்லை.அங்கு படித்த ஒரு மாணவி  மூலமாக  அறியபட்டது சுகாதாரமுள்ள கழிப்பிட வசதி கூட இல்லை என்பதே. ஜாஸ்மின் பெயரில் விளம்பரம் பெரவேண்டும் என விரும்பும் அரசு   செய்யவேண்டியது மாணவியின்  இனியுள்ள பள்ளி  செலவை ஏற்ப்பது, வேலைக்கு உத்திரவாதம் அளிப்பது என்பதுதான்.

பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்து வழங்கும் பாராட்டு விருதுகள் எல்லாம் மாணவர்கள் நலனுக்கு உதவுகின்றதா என்றால் கேழ்விக்குறியே.பல்கலைகழக விருதுகள்(gold medal) வழங்கும் நிகழ்வுகளை   மாணவர்களுக்கு வழங்கும் ஒரு பாராட்டு விழா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை. அமைச்சர்களுக்கு மதிப்புவழங்குவதற்க்கும் ,அமைச்சர்கள்  தங்கள் கருத்துக்களை உரைக்கும் தளம் ஆகவே உள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களை கண்டு ரசிக்கலாம்.

விருது என்ற பெயரில்  அளிக்கப்படும் மெடலுடன் வேலைவாய்ப்பும் அளித்தால் சிறப்பாக கருதலாம்.  இல்லாவிடில் மெடல் மட்டும் பெறபடுவது கேலிகூத்தாகவும் சிலவேளைகளில் உணரபடுவதும் உண்டு. நான் பெற்ற  மெடலை  என் வகுப்பு தோழனிடம் காண்பித்தபோது இதுக்கு 50 ரூபாய் மதிப்பு வரும்.  தங்கம் அல்ல தங்கம் பூசிய தகரம் என கூறினான் . எனக்கு  அதிர்ச்சியை  கொடுத்தது. ஒரு வேளை ஒரு வேலை வாய்ப்பு கொடுக்க பட்டால் விருதுக்கு பதின் மடங்கு மதிப்பு கூடியிருகும். முயற்ச்சியுடன் படிப்பவர்களுக்கு  ஒரு உற்ச்சாகத்தையும் கொடுத்திருக்கும்.

குஷ்புவிடம் மறுபடியும் வரவேண்டியுள்ள  காரணம் ,ஜாஸ்மின் சாதனையை கலைஞரின் சாதனையாக கூறியுள்ளார். ப்ள்ளி வாசலை காண இயலாத பெண்கள்,தெருவோரங்களில் பிச்சை எடுக்கும் பெண்கள்,  குப்பை பெருக்கும் பெண்கள் யாருடைய சாதனை. குஷ்புவின் கணவருக்கு கலைமாமணி விருது கொடுத்து குஷ்புவை  அரசுவின் ஊதுகுழல் ஆக்கியுள்ளார்கள் போலும்.  சுந்தர் தனது படங்ளில் பெண்களை பயன்படுத்துவது  பரிதாபத்துக்குரியதே. கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, காதல் காட்சிகளில் கூட  முரட்டு பயலிடம் பம்பரம் கிடைத்துள்ளது போல் கைய்யாளுவதை கண்டுள்ளோம்.குஷ்பு போன்றோர் நாய்க்கு எலும்பு துண்டு கிடைத்தால் வாலை ஆட்டி நிற்ப்பது போல் நன்றாகவே மனப்பாடம் படித்து ஒப்பிக்குகின்றனர். பெண்கள் நாயகி போல் பொது மேடைகளில் காட்சி தருகின்றார் பேசுகின்றார். தண்டு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்பது இது தானோ?

அலுப்பூட்டும் உரையாடல்கள்!

ஒருவரை ஒருவர் தொடர்பு படுத்திகொள்ள பேசுதல் பயன்படுகின்றது. எவ்வாறு பேச வேண்டுமென்று சிலருக்கு வரையரை கிடையாது. நாக்குதான் இலவச தொண்டு செய்கின்றதே என சிலர் பேசியே தொடர்பை முறித்து கொள்வார்க்ள்.
எங்க திருநெல்வேலியில் பேச துவங்கும் முன்பே ஒரு தேர்வு வைப்பின்,நீங்க என்னாளு, சொந்த ஊர்  ஏது, அப்புறம் பேசும் பகுதி முழுதும் எங்க ஆளுங்க இப்படி, எங்களிலே இதான் முறை, உங்க ஆளுங்களே இப்படித்தான் இப்படி அப்ப்டி திருநெல்வேலி நா-வாளாலேயை வகுந்துடுவாங்க.
இன்னும் கொஞ்ச வாத்தியார் பெண்டாட்டிக, எங்க வீட்டு சார் சொன்னாங்க ,எங்க சார் வந்தாங்கனு  பச்சபுள்ளயாட்டும் அழுவாங்க.
வேறு சில மனுஷாங்களை பார்த்தாலே நீங்க ஆஸ்பத்திரியில  சேர்ந்தது மாதிரி ஆயிடுவீங்க. என்ன மெலிஞ்ட்டே ,சொகமில்லயா, கறுத்து போயிறே அடையாளமே  தெரியலே, , சே ஏன் இப்படி இருக்கே சாப்பாட்டுக்கே வழியில்லையான்னு மாதிரி கேட்டுடுவாங்க. அவ்வளுவு நேரம்  நன்னா feel  பண்ணுன நம்மளே சோர்ந்திடுவோம்.
சரி சரி கல்வி அறிவு பத்தாத மக்கள்னு வடிவேல் மாதிரி மண்டயில அடிச்சுகிட்டு  சில மெத்தபடிச்ச   மேதைகள் பேசதை பாருங்க.
இவுங்க என்னுடன் MPhil  கற்க்கும் தோழி
ஜோசபின் நமக்கு வேலை கிடைக்குமா?
எனக்கு நம்பிக்கையே இல்லை.
வேலை கிடைகலனா என்ன பண்ணுவது?
வேலை கிடைத்தாலும் ரூ 6500  கிடைக்குமாம்.
இதை வைத்து  என்ன பண்ண்?
நீங்க முயற்ச்சி பண்ணுகின்றீர்களா?
எங்க ஊரில உங்களுக்கு கிடைக்காது!ஏன்ன எங்களுக்கு கொடுத்த பிறகு தான் நீங்க எதிர் பார்க்க முடியும்....
நீங்க முயர்ச்சி  பண்ணின college ல அவளெ எடுத்துட்டாங்களாம்..... அவ இருக்குத கல்லூரியில் நான் போகமாட்டேன்.
நீங்க தேர்வுக்கு படிச்சிட்டீங்களா? என்ன எழுதே?  4 பக்கம் எழுதனுமோ? நான் ஒற்றும் படிக்கலே......என்னத்தை படிச்சு......

சரி போதும் போதும்  என்று எண்ணி முணைவர் மாணவி ஒரு பேராசிரியரின் விடைபெறும் (sentoff)   மீட்டிங்ல பேசுகிறதை கவனித்தால்,  "நம் பேராசிரியர் சிரிப்புக்கு பெயர் பெற்றவர்   சிலரை பார்த்தவுடன் சிரித்து பேசுவார், பேசும் நபர் நகர்ந்தவுடன் அவன்கெடக்கான்  என கூறுவார் !"........எப்படியிருக்கு வாழ்த்துரை?
ஒரு இளம் முனைவர் ஆசிரியை  எப்படி பேசுகின்றார் என பாருங்கள், "பேராசிரியருக்கு ஒவ்வொரு செட்ல ஒருத்தரை தான் பிடிக்கும் , என்னைதான் எங்க  செட்ல பிடிக்கும் என்னை செல்லம் தான் கூப்பிடுவாங்க. (நாங்களும் அவருடைய மாணவர்கள் தான் நாங்க மட்டும் என்ன  தொல்லையா?)

சமச்சீர் கல்வி

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம்  எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் பெற்றிருக்க வேண்டும் . இவ்விதம் உள்ள சீர் திருத்தால் நம் மாநில மாணவர்கள் தேசிய அளவில்  தரம் தாழ்த்த படும் சூழல் உள்ளது. உலகமயமாக்கல்  சூழல் கல்வி மட்டும் கல் யுகத்தை நோக்கீ சென்று கொண்டுருக்கின்றது. ஏற்கனவே தமிழ்நாடு  SSLC கேரளா SSLC  க்கு சமமாக மதிப்பது கிடையாது. நமது மாணவர்ளுக்கு பட்டபடிப்பு முடித்திருந்தால் கூட வங்கி க்கு சென்றால் ஒரு படிவம் வாசித்து நிரப்ப தெரிவது கிடையாது, பிழை இல்லாது எழுத தெரிவது கிடையாது ஏன்  ஒழுங்காக ஆங்கிலம் போகட்டும் தமிழில்  கூட பேச தயங்குகின்றனர்.(கடலையல்லா-loose talk).

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தி தரமான கல்வி தருவதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் ரு 1500  துவங்கி 4000 த்துக்கு உள்ளாகவே.கொத்தனார் (400* 30) கூட இவர்களை விட பல மடங்கு ஊதியம் பெருகின்றனர். தற்போது அரசு பள்ளி ஆசிரியரின் ஊதியத்தை கணக்கிட்டு  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கற்று கொடுக்கும் ஆற்றலை குறைத்து ஏனோ தானோ என்று கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் பள்ளி  மாணவர்களும் tution போய் தான் தங்கள் படிப்பை சரிபடுத்திகொள்கின்றனர்.
 tதுவக்கபள்ளீ படிப்புக்கு  ஒரூ வருடத்திற்க்கு  குறைந்தது 20 ஆயிரம்  ரூபாய்  கொடுக்க நேரிடுகின்றது.  பள்ளி வாகன கட்டணமும்  அசுரனை போன்றுள்ளது.
 அரசு பள்ளிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு வகுப்பில் 100க்கும் அதிகம் மாணவர்கள், ஆசிரியர்கள்( ஆண் பெண் இருபாலரும்) வகுப்பறையே விட பக்கத்து தேனிர் கடை மற்றும் அரட்டை அரங்த்தில் காலம் தள்ளுகின்றனர்.இன்னும் சில  ஆசிரியைகள் தங்கள் தலையில் உள்ள பேன் எடுக்கவும் மாணவிகளையே பயண்படுத்துகின்றனர். பள்ளி வளாகம், கழிப்பறை எங்கு செல்லினும் சுத்தம் பராமரிப்பது கிடையாது.ப்ள்ளிக்கு தேவையான தண்ணீர்  எடுப்பதற்க்கும் மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் பணக்கார வீட்டு குழந்தைகள், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் central board ல் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆக   சமச்சீர் கல்வியில் படித்து படித்த  ஏழைகளாக தமிழ் நாட்டுக்குள்ளயே இருக்க  வேண்டியது தான்.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9413:2010-06-06-19-51-35&catid=1126:10&Itemid=393

தில்லியில் படிக்கும் ராமதாஸ் பேரபிள்ளைகள் வெளிநாடுகளில் படித்த கலாநிதி சகோதர்கள் இருக்கும் போது ந்மக்கு ஏன் கவலை.கல்வி தந்தையர்களுக்கு வாழ்வு அளித்து விட்டு மானாட மயிலாட கண்டு நம் கவலையை களையுவோம். இத்ற்க்கு ஒரே வழி கல்வியை மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.http://www.blogger.com/post-edit.g?blogID=8803242748745605782&postID=508094286872031209