header-photo

My Home Town-Vandiperiyar.


வண்டிப்பெரியார்   ஏழு  தேயிலை தோட்டங்கள்   நடுவில்  அமைதியான தேவதை போல் காட்சியளிக்கும் அழகான சிறு வியாபார ஊர் ஆகும்.  பெரியார் என்ற நதி  இக்கரை, அக்கரை என இந்த சிற்றூரை பிரித்து  ஊடே ஓடுகின்றது.

பாலம் கட்டுவதற்க்கு முன்பு நதியின் இரு  கரையிலும்  வாகனஙகளை  நிறுத்தி   பொருட்களை வள்ளம் (தோணி) மூலம் மாற்றியுள்ளனர்.  ஆகயால் எங்க ஊருக்கு வண்டி (வாகனம்)+பெரியார்) என பெயர் வந்துள்ளது.

வண்டிப்பெரியார் பாலம் ஆங்கிலேயர்களால் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.  பெரிய வாகனங்கள் செல்லும் போது சிறிய அதிற்வை தற்போது  உணரலாம். முல்லைப்பெரியார் டாம்(dam)  உடைந்தால் முதல் முதலாக  வண்டிபெரியார் அழியும் என கூறி நடைபெரும்  அரசியல் போராட்டத்தின் முக்கிய தளவும் இதுவே.

மழை காலத்தில்  இந் நதியே   பார்க்க திரளும் கூட்டம் பெரும் அளவு உண்டு.
AVT, ABT, Malayalam Plantation,Michel Manarkadu  போன்ற தேயிலை தோட்டங்கள் இருப்பதால்     அரசியலுக்கும் பஞ்சம் இருந்தது கிடையாது.

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உடபட்ட இப்பிரதேசம் கவனிப்பாரற்ற காடாகவே இருந்துள்ளது. அரச தண்டனை பெற்று தலைமறைவாக வாழ்ந்த பூமி என்றே சொல்கின்றனர். பின்பு ஆங்கிலேயர் திருவனந்தபுர ராணியின் வேண்டுதலுக்கு இணங்க ஏலம் பயிறிட குட்டிக்கானம் பக்கம் வந்து குடியேறியுள்ளனர். லண்டனுக்கு உகுந்த காலநிலை உள்ளதால் பல வெள்ளக்காரர்கள் விரும்பி தேயிலை தோட்டவும் பயிறிட ஆரம்பித்து விட்டனர்.    காமராசர் ஆட்சியில் கன்னியகுமரியை தமிழகம் வைத்து கொண்டு இப்பிரதேசத்தை  கேரளா இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதியுடன் இணைத்து கேரளாவுடன் இணைத்தது. ஆங்கிலேய காலத்தில் தேயிலை தோட்ட வேலைக்கு என ராமநாதபுரம், சங்கரன்கோவில், குடியேறிய தமிழகர்களும் வியாபாரம் தேயிலை தோட்ட அதிகாரிகளாக வந்த தென் தமிழக மக்களும் இங்கு குடியேறியதால் 70  சதவீததிலும் மேலுள்ள மக்கள் தமிழர்களே. வண்டிபெரியார்  டவுணில் உள்ள வியாபாரிகளும் சாத்தான்குளம், கம்பம் போன்ற ஊர்களிலுள்ள தமிழர்கள் தான்.10 ஆண்டுகளுக்காளாக மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகின்றது.  வேலை வாய்ப்பு தேவைக்காக மலையாளிகளும் குடியேற ஆரம்பித்து விட்டனர். . முன் காலங்களில் இடம் கொடுத்தும், இங்கு குடிபுகிர தயங்கிய மலையாளிகள் தற்போதைய வசதி வாய்ப்பு கண்டு குவிய ஆரம்பித்துள்ளனர். இருந்தும் இயற்கையின் அழகுக்கு எந்த  குறைவும்  இல்லாது அழகாக பராமரிக்கின்றனர்.                                                                                              
நாங்க படிக்கும் காலங்களில் (25 வருடத்திற்க்கு முன்பு)  கல்விக்கு என அரசு பள்ளி மட்டும் சார்ந்து இருக்கும் சூழல் இருந்தது. தொடக்க கல்விக்கூடம் கிழக்கு பக்கம்  இருக்கும் மலையின் மேலும்  மேல்நிலைப்பள்ளி மேற்கு பக்கம் இருக்கும் மலைக்கு மேல் இருந்தது. உயர்நிலை பள்ளி வண்டிபெரியார் டவுனில் இருந்து 1.5 மைல் தள்ளி பாதையோரம் அமைந்திருந்தது. உலக பிரசித்தி பெற்ற தேக்கடி, சபரிமலை அய்யப்ப சாமி கோவில் மிக அருகாமையில் அமைந்துள்ளதால் சுற்றலா பயணிகளுக்கு பஞ்சம் இருப்பது இல்லை.

தேக்கடியை முன்நிறுத்தி வரும் சுற்றுலா பயணிகளால் வண்டிபெரியாரின் முக்கியம் மங்கி காணப்படுகின்றது. ஒருவேளை கேரளா அரசுவின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம். தேக்கடியே சுற்றி இருப்பது மலையாளிகளே, ஆனால் வண்டிபெரியார் தமிழர்களின்  பிரதேசம் என கூறலாம்.  உண்மையில் தேக்கடி(குமளி)யை விட வண்டிபெரியாரில் சாப்பாடு, தங்குமிடம் மலிவாக கிடைக்கும்.  மதுரையிலிருந்து  குமளிக்கு 4 மணி நேரப்பயணம் செய்ய வேண்டும். குமுளியிலிருந்து 1/2 மணிமணி நேரம் பயணம் வண்டிபெரியார் சேர போதுமானது. வண்டிபெரியாரில் லாட்ஜில் தங்க ரூ.350ல் இருந்து 1000 வரை செலவு வரும்.  சாப்பாடும் கேரளா, தமிழ் நாடு சாப்பாடு என ருசியாக சாப்பிடலாம்.
பயணிகளை அழைத்து செல்வதெற்கென, மலைகளில் பயணம் செய்ய உதவும்  ஜீப்புகளும் எளிதாக கிடைக்கும். பல தரப்பட்ட கலாச்சார சூழலுள்ள மக்களாக இருப்பினும் உலகமயமாக்கலின் தாக்கம் எட்டாத எளிமையான மக்கள்.

பொதுவாக மக்கள் இணையத்தில் தரவுகள் சேகரித்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி பார்த்து திரும்புகின்றனர். பருந்தன் பாறை புல்லு மேடு , மவுண்டு, வள்ளக்கடவு போன்ற இடங்களூம் இயற்கை பிரியர்களுக்கு விருந்தாகும் இடமாகும்.  நமது சொந்த வாகனத்தில் சென்றால் கூட வாகனத்தை பாதுகாப்பாக வண்டிப்பெரியார் பஞ்சாயத்து மைதானத்தில் அல்லது பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு உள்ளூர் வாகனங்களில் செல்வதாகும் பாதுகாப்பு.  குறுகிய கல் மண் நிறைந்த பாதையில் பயணம் செய்தாலும் அந்த பயணத்திலுள்ள சவால்  நம் மனதில் என்றும் நினைவாக நிற்கும்.

நான் எனது ஊருக்கு செல்லும் போது இக்கரையிலிருந்து அக்கரை செல்லும் வரை நல்லாயிருக்கிறேயா,சுகமானோ(are you fine in Malayalam) என்ற விசாரிப்பு  கேட்டு கொண்டே இருக்கும். கல்வி மற்றும் வசதி வாய்ப்பு பெறுவதில் சுரண்டபடும் மக்களாகவே என் மக்கள் இன்றும் இருக்கின்றனர்.


1 comments:

Subi Narendran · Top Commenter · Works at M&S said...


வண்டிப்பெரியார் என்ற அழகான உங்கள் ஊரைப் பற்றிய விரிவான பகிர்வு அருமையான ஜோஸ். வண்டிக்கும் பெரியாருக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கும் போது, அழகாக பெயர் வந்த விதம் கூறி உள்ளீர்கள். நடைமுறைத் தமிழில் தெரியவேண்டியத்தை அழகாக வர்ணித்து எழுதிய விதமும் வண்ணப் படங்களும் இந்த ஊரை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் நூண்டுகிறது. எங்களுடைய அடுத்த விடுதலை உங்களோடு வண்டிப் பெரியாரில்தான். நிறைய நிறைய எழுதுங்கள். நல்ல பகிர்வுக்கு நன்றி தங்கையே.

Post Comment

Post a Comment